பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 33

வரகூர் பாகவர்தர் இராமசாமி ரெட்டியாரின் "கதா-காலட்சேபம்" நடைபெற்றது. "சீதா-கல்யாணம்" "பக்த இராமதாஸ் சரித்திரம்" "உருக்குமிணி கல்யாணம்" நடைபெற்றன. சப்ள கட்டையைத் தட்டிக் கொண்டும். கால்களிலும் கைகளிலும் சலங்களைகளைக் கட்டிக் கொண்டும் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்களைப் பாடிக் கொண்டும். சிறிது ஆடிக் கொண்டும், "காலட்சேபம் அக்-1998 செய்த முறை இன்றளவும் மனத்தில் பசுமையாகவே உள்ளது. சுமார் பதினான்கு ஆண்டுகட்கு முன்னர் நாமக்கல்லில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் அவரைச் சந்தித்து மகிழ்ந்தேன். வயது 96ஐத் தாண்டியது என்றார். இன்று அவர் திருநாடு அலங்கரித்து விட்டார் என்பது தெரிந்தது.

பள்ளியிறுதித் தேர்வு வெளி வந்ததும் நானும் தும்பலம் A. சுப்பையாவும் (என் வகுப்புத் தோழர். முசிறிக்கு அருகிலுள்ள தும்பலத்தைச் சார்ந்தவர் திரு. அரங்கசாமி ரெட்டியாரை வேங்கடாசலபுரத்தில் அவர் இல்லத்தில் சந்தித்து அளவளாவினோம். A. சுப்பையா கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை. வாணிகத்தில் இறங்கிவிட்டார்.

சூன் இறுதிவாரத்தில் நான் திருச்சி சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தேன். திருச்சி காசியப்பா ராவுத்தர் ஸ்டோர்ஸ் தங்கும் விடுதியில் திருச்சி டவுன் ஹாலுக்கு அருகிலுள்ளது அரங்கசாமி ரெட்டியார் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் மாத வாடகை ரூ. 5'- தங்கியிருந்தேன். இருவரும் காலை 8.30க்குப் புறப்பட்டு மேல் அரண் சாலையிலுள்ள ஆதிகுடிவேங்கடராம அய்யர் உணவு விடுதியில் மாதம் இரண்டு வேளை உணவுக்கு ரூ. 10/= உணவுண்டு கல்லூரிக்குப் போய் வருவோம். இரவு 730க்குப் புறப்பட்டு உணவு கொண்டு அறைக்குத் திரும்புவோம். அவர் பாடங்களைப் படிக்கும் முறைகளை விளக்கியது இன்றும் நினைந்து பார்க்கிறேன். இரவு 2 மணி நேரப் படிப்பு: அதிகாலை 4 மணிக்கு எழுந்து 3மணி நேரப் படிப்பு: ஒரு மணி நேரம் குளியல் முதலியன. கல்லூரியின் கண்டிப்பான ஒழுங்குமுறையும் என் திறனை வளர்த்தது. இன்றும்கூட (வயது 83இல் நாடோறும் 10 மணி நேரம் படிக்கிறேன்: எழுதுகிறேன்.

3