பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நீங்காத நினைவுகள்

தந்தை செக்யூரா என்ற பாதிரியார் இவரை ஆங்கிலம் (பகுதி-t எழுதமுடியாமல் செய்துவிட்டதால் இவர் ஜூன் முதல் செப்டம்பர் வரை திருச்சியில் இருக்க வேண்டிய நிலை வந்தது. தெப்ப குளத்துக்கருகிலுள்ள ஒரு முதலியார் விடுதியில் தங்கியிருந்தார் நான் மட்டிலும் காசியப்பா ராவுத்தார் ஸ்டோர்சில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தங்கியிருந்தேன் இரண்டு பார்ப்பன மாணவர்கள் தொல்லை கொடுத்து வந்ததால் நானும் தெப்பகுளத்துக் கருகிலுள்ள மலபார் விடுதிக்கு வந்து விட்டேன். அரங்கசாமி ரெட்டியார் அருகில் இருந்திருந்தால் பார்ப்பன மாணவர் வாலை ஒட்ட நறுக்கியிருப்பார். மலபார் விடுதியில் நல்ல சூழ்நிலை, நன்றாகப் படித்து இடைநிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்

நினைவு - 2 : நான் சைதைக் கல்லூரியில் படித்து எல் டி தேர்வு எழுதியபின் (ஏப்பிரல் - 1941 திருச்சி வழியாகப் பொட்டணம் செல்லத் திட்டமிட்டுத் திருச்சி வந்தடைந்தேன். அரங்கசாமி ரெட்டியார் தொடர்பு கொண்டிருந்ததால், அவர் எழுதிய கடிதப்படி திருச்சி வந்தேன் அப்போது திரு ரெட்டியார் மிகு புகழ்பெற்ற கணபதி அய்யரிடம் வக்கில் பயிற்சி (Apprentice) பெற்று வந்தார். ஆண்டார் தெருவிலுள்ள மாதவ அய்யர் ஸ்டோர்ஸ் விடுதியில் தங்கியிருந்தார். நானும் அங்கு ஒருநாள் தங்கியிருந்தேன். அப்போது துறையூரில் பெருநிலக் கிழவர் நடுநிலைப் பள்ளி ஒன்று தொடங்கப் போவதாக அரங்கசாமி ரெட்டியார் என்னிடம் தெரிவித்து அதன் தலைமையாசிரியர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்புமாறு யோசனை கூறினார்.நல்முறையில் விண்ணப்பம் தயாரிக்கப் பெற்றது. தட்டச்சு செய்யாமல் என் கையெழுத்திலேயே விண்ணப்பம் தயாரிக்கப் பெற்றது தட்டச்சு செய்யாமல் என் கையெழுத்திலேயே விண்ணப்பமும் அதன் இணைப்புகளும் இருக்கலாம் என்று யோசனை கூறினார் திரு. ரெட்டியார் அக்காலத்தில் என்னுடைய தமிழ்க் கை எழுத்தும் ஆங்கிலக் கை எழுத்தும் முத்துக் கோத்தாற் போல் மிக அழாக இருந்தமையால் தட்டச்சு வேண்டா என்று தீர்மானமாயிற்று விண்ணப்பமும் அதன் இணைப்புகளாக (i பி.எஸ்சி பட்டசான்றிதழ் 12 புனித சூசையப்பர் கல்லூரி முதல்வர்