பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 43

அவரிடம் வாக்குவாதம் நடைபெறும் போது "குரங்கு ரெட்டி" என்று இழிவு தோன்றச் சொல்லும்போது மிளகாய்ப் பொடி காரம் தும்மலை விளைவிப்பதுபோல் அவருக்குக் கோபம் எழத்தான் செய்யும்.

நல்ல பழங்களை விளைவிக்கும் மாந்தோட்டம் வைத்திருந்ததன் காரணமாக அவருக்கு நற்புகழ் உண்டு. ஆனால் இவர் ஒரு "சிடு மூஞ்சி' எளிதில் கோபத்திற்கு உள்ளாவார். இதே ஊரில் "குமரப்ப கவுண்டன்" என்ற ஒருவரும் இருந்தார். இவரைக் "கரடிக் கவுண்டன்" என்று மக்கள் குறிப்பிடுவது வழக்கம். கரு நிறம்: சற்றுக் குள்ளமானவர். தலைமுடி கலைந்து கிடக்கும். அடிக்கடி முகச் சவரமும் செய்து கொள்வதில்லை. முகத்திலும் அடர்த்தியான முடி இதனால் இவரிடம் "கரடித் தோற்றம்" தெரியும். இதனால் மக்கள் "கரடிக் கவுண்டன்" என்ற சாட்டுப் பெயரிட்டு இருக்க வேண்டும். இது கவுண்டனுக்கும் தெரியும். இராமசாமி ரெட்டியாருக்கும் குமரப்பக் கவுண்டனுக்கு அடிக்கடி மோதல் நிகழும். இராமசாமி ரெட்டியார் தம்மைக் குமரப்பக் கவுண்டன் "குரங்கு ரெட்டி" என்று அடிக்கடி இழித்துக் கூறுவதால் தம் மானம் பறிபோவதாகக் கூறி ரூ. 2000/= க்கு "மான நட்டம்" கோரி துறையூர் மாவட்ட முனிசீப் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். குமரப்பக் கவுண்டனுக்கு வக்கீல் அரங்கசாமி ரெட்டியார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இராமசாமி ரெட்டியார் குறுக்கு விசாரணையில் கூறியது : "என் பெயர் இராமசாமி ரெட்டியார் சிலர் என்னைக் குரங்கு ரெட்டி" என்றும் குறிப்பிடுவார்கள் என்பதாகக் கேள்வி. அவர்கள் யாவர் என்பதையும் தெரிந்து கொள்வேன். அவர்கன்மீது யான் வழக்குத் தொடுக்க வில்லை. ஆளை அடையாளம் தெரிந்து கொள்வதாகக் குறிப்பிட்டிருப்பார்கள் என்று சும்மா இருந்து விட்டேன்."

குமரப்பக் கவுண்டன் முதல் விசாரணையில் கூறியது : "என் பெயர் குமரப்பக் கவுண்டன் என்னைக் கரடி கவுண்டன் என்றும் சிலர் அழைப்பார்கள் இதனால் எனக்குக் கோபம் வருவதில்லை. கோபம் கொள்வதற்கு இதில் என்ன இருக்கிறது? அடையாளம் நன்கு தெரிந்து கொள்வதற்கு என்னை அப்படி வழங்குகின்றனர் என்று