பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பேராசிரியர் மு. நடேச முதலியார்

நோயும் வெங்கலிப் பேயும் தொடரநின்

நூலிற் சொன்ன முறைஇய மாதிநான்நான் தோயும் வண்ணம் எனைக்காக்கும் காஉறும்;

தொழும்பு கொள்ளும் சுவாமியும் நீகண்டாய்! "ஒயும் சன்மம்; இனி அஞ்சல் அஞ்சல்" என்று உலகம் கண்டு தொழஒர் உருவிலே தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரித்

தாயும் ஆன தயாபர மூர்த்தியே

என் அருமைப் பேராசிரியர் மு. நடேச முதலியாரை எழுதத் தொடங்கும் போது இந்தப் பாடல் என் மனத்தில் குமிழியிடுகின்றது. என் கல்லூரி வாழ்வில் இடைநிலை வகுப்பில் பயிலும்போது இரண்டாண்டுகள் (1934-36) இவரிடம் தமிழ் கற்கும் பேறு பெற்றேன். இவர் திருச்சி - மலைக்கோட்டை யானைக் கட்டித் தெருவில் உள்ள ஓர் இல்லத்தில் வாழ்ந்தவர். அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் தாயுமானவரையும் வணங்கிவிட்டு வருவதால் அப்பெருமான்பற்றிய பாடல் என் மனத்தில் எழுந்தது.

நினைவு - 1 : இப்பெருமகனாரிடம் நெருக்கமான உறவு ஏற்பட்டதே ஒரு விநோதமான நிகழ்ச்சியின் காரணமாகும் "தமிழ் அய்யா முதலியார் நன்றாகத் தமிழ் கற்கவில்லை. வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் குறிப்பேட்டிலிருந்து எழுதி வைத்துக் கொண்டு கதை அளக்கின்றார். அவருடைய பாடநூலில்

1. தா.பா - எடுத்த தேகம்-2