பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. நடேச முதலியார் 57

ஏடுகளுக்கிடையில் வெள்ளைத்தாள்கள் வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருப்பதால் நூல் பருமனாகக் காணப்படுகிறது. இதைக் கொண்டே அவர்தம் இரகசியம்பற்றித் தெளியலாம்" என்பது குறும்புக்கார மாணாக்கர்களுள் ஒரு சாரார் பேச்சு. இவர்களில் மற்றொரு சாரார், "நாம் இவரிடம் வாலாட்ட முடியாது. சாமியார்களிடம், (Fathers) இவருக்கு நல்ல செல்வாக்கு. எவனாவது வாலாட்டினால் சாமியார்களிடம் வத்தி வைத்து அவனைத் தொலைத்து விடுவார்" என்று கிசுகிசுப்பர்.

வகுப்பு முடிந்ததும் அவரைச் சுற்றி ஒரு சிலர் நின்று கொண்டு மரியாதையுடன் கொஞ்சும் பாவனையில் "கால் கை" (காக்கை) பிடிப்பர். இந்தக் குழுவில் அடியேனும் சில சமயம் நிற்பதுண்டு. ஒரு சமயம் நான் "தமிழய்யாவின் பாடநூல் பருமனாகக் காணப்படுகிறதே! என்னக் காரணமோ?" என்று வாய்தவறி உளறிவிட்டேன். திரு. முதலியார் "அதிகப் பிரசங்கி, உன் பெயரென்ன? தனியாக என் அறையில் வந்து பார்" என்று ஆணையிட்டார். "சுப்புவுக்குச் சனிபார்வை ஏற்பட்டுவிட்டது. என்ன ஆகுமோ?" என்று சில நெருங்கிய நண்பர்கள் கவலைப்பட்டனர். எனக்குக்கூட அதிர்ச்சிதான். மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் அந்த ஆணை குரு பார்வை" என்பதைப் பின்னர்தான் அறிய முடிந்தது. ஆனால் அவரை அறையில் காண அஞ்சி அவர் இல்லத்திற்கே சென்று மன்னிப்புக் கோரினேன்.

இல்லத்திற்குச் சென்றபோது அவர் மாணாக்கர்கள்பால் அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருந்ததை அறிய முடிந்தது. இல்லத்தில் செளலப்பியமே வடிவு கொண்டிருப்பதைக் காண முடிந்தது. என்னைப்பற்றிச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டேன். வகுப்பில் உளறியதைக் குறிப்பிடாமல், "தம்பி நீ நாட்டுப்புறத்திலிருந்து வருபவன். சிறு வயதில் தந்தையையும் இழந்து நிற்கின்றாய். அன்னையார் சிரமப்பட்டு பணம் அனுப்புகின்றார். நகரச் சாயை உன்மீது படியாது காத்துக் கொள்க. மாணாக்கர் உலகைத் தொற்றுநோய்போல் பரவும் சிறுசுருட்டுப் (Cigarette) புகைக்கும் பழக்கம் உன்னைப் பற்றாது பாதுகாத்துக் கொள்க. அடிக்கடி