பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நீங்காத நினைவுகள்

இப்போது பின் நோக்கிப் பார்த்தால், பேராசிரியரின் கற்பித்தல் எங்கட்குக் கவிதையநுபவம் தரவில்லை என்பதை நினைவுகூர முடிகின்றது. காண்டவவன தகனச் சருக்கப் பாடம் மெதுவாகவே நடைபெற்றது இச்சருக்கத்தில் இப்போது மூன்று பாடல்களை நினைவுகூர முடிகின்றது

தொழுதரு விசயன், தாலுஏ ழுடையோன்

சுடர்முடி நனைந்திடு வதன்முன், எழுமுகில் இனமும் பொழிதரு மாரி

யாவையும் ஏவினால் விலக்கி, முழுதுல கமும்தன் னிடத்தடக் கியவான்

முகடுற முறைமுறை அடுக்கி குழுமுவெங் கணையால் கனல்கட வுளுக்குக்

கொற்றவான் கவிகையும் கொடுத்தான்.

ஆழ்திரு பரவை ஏழும்வற் றிடுமாறு)

அமிழ்த்தகார் உமிழ்ந்திடு நெடுநீர் தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற் கிடையோர் தனித்திவ லையும்பொசி யாமல் வீழ்தரும் அருவி பாவகன் தனக்கு

விசயன்அன் றளித்தபொற் குடைக்கு சூழ்தர நிரைத்துத் தூக்கிய முத்தின்

சுடர்மணித் தொலையல்போன் றனவே. மண்டிமீ தெழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலைவா ளிகளால் கண்டகூ டத்திற்கு அமைத்தசெம் பவளக்

காண்தரு துண்திரள் காட்ட அண்டகூ டத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்தபல் ஆயிரம் கோடி கண்டது னங்கள் போன்றன, பரந்து

தனித்தனி முகில்மொழி தாரை.