உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V. சொக்கலிங்கம் பிள்ளை 67

இக்கூறியவற்றுள் பெரும்பான்மையானவை சொக்கலிங்கம் பிள்ளையிடம் அமைந்து கிடந்தன

நினைவு - 1 : 1940-41 இல் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபோது ஒரு சாலை மாணாகர்களில் மிகவும் நெருங்கிப் பழகியவர் நான் துறையூரைச் சார்ந்தவன் என்பதை அவர் நன்கு அறிவார்.அவர் காரைக்குடியைச் சார்ந்தவர் என்பதை யான் நன்கு அறிவேன். சைதையை விட்டபிறகு பத்தாண்டுக் காலம் இருவரிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை கடிதத் தொடர்பு கூட இல்லை, யான் அழகப்பா பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகப் பணியேற்றதும் ஜூலை 1950) பலரிடம் உசாவி அவர் நகராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகத் தலைமையாசிரியராக இருந்ததை அறிந்து அளவளாவி மகிழ்ந்தேன் சொக்கலிங்கம் பிள்ளை அமைதியான போக்குடையவர்: பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவரது இல்லற வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதை அறிந்து மிகவும் மனம் கவன்றேன் இறுதிவரை அவர் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

• 爱 球 • 2 எனைமாட்சித் தாயினும் இல்

என்ற நிலைதான் சொக்கலிங்கம் பிள்ளையின் இல்வாழ்க்கை. "கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி" என்ற முதுமொழிக்கிணங்க அவருக்கு மாணிவாழ்க்கையே தலைவிதியாக அமைந்து விட்டது "இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை" என்ற ஒளவைப் பாட்டியின் அமுதவாக்கின் உண்மையை அறிவதற்கு வாய்ப்பில்லாது வாழ்ந்த உத்தமச் சான்றோர்

நினைவு 2 : நாங்கள் இருவருமே எளிய குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை"

2 குறள் = 52 3 வாக்குண்டம்-21 4 வெற்றிவேற்கை, 15