பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. சொக்கலிங்கம் பிள்ளை 69

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

என்ற வள்ளுவர் வாக்கைக் கடைப்பிடித்து உயர்ந்தவன் கணநாதன், சில ஆண்டுகட்கு முன்னர் (1985) குருதிப்புற்று நோயால் துன்பப்பட்டு மீளா உலகம் அடைந்தான்

பள்ளி தொடங்கிய நாள் தொட்டு சொக்கலிங்கம் பிள்ளை தற்காலிகத் தலைமையாசிரியராக இருந்தார். அவரை முதல் உதவியாசிரியராக்கி அவர் இடத்திற்கு விளம்பரம் செய்து ஆரோக்கியசாமி என்பவரைத் தலைமையாசிரியராக நியமனம் செய்தது நகராண்மைக் கழகம். இஃது அடாத செயல். இது தொடக்கத்திலிருந்து பள்ளியைத் 'தாயினும் சாலப்பரிந்து" வளர்த்தவரை நீக்கிவிட்டுப் புதிய ஒருவரைக் கொண்ர்வது அநியாயம். ஆரோக்கியசாமி மிகவும் நல்லவர். நிலைமையை நன்கு புரிந்து கொண்டு சொக்கலிங்கம் பிள்ளைக்கு நல்ல மதிப்பு தந்து மரியாதையுடன் நடத்தினார். ஐந்தாண்டுகள் பணியாற்றிய ஆரோக்கியசாமி ஓய்வு பெற்றபின் சொக்கலிங்கம் பிள்ளை நிரந்தரத் தலைமையாசிரியராக நியமனம் பெற்றார்.

நினைவு 3 : காரைக்குடியில் இருந்த காலத்தில் முதலில் பழக்கமானவர் M.S. இராசமாணிக்கம் செட்டியார் சொக்கலிங்கம் பிள்ளை அவர் கடையில் அடிக்கடி அமர்ந்திருப்பது கண்டு அங்குப் போனேன். அவரால்தான் நகைக்கடைத் தொடர்பு ஏற்பட்டது என் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் செட்டியாரின் நகைத்தொழில் படுத்து விட்டது. பெயருக்கு ஏதோ நடத்தி வந்தார் 2 ரூபா. 3 ரூபா மாதாந்திர சீட்டுகளும் ஒன்றிரண்டு 50 ரூபா சீட்டுகளும் நடத்தி வந்தார். நான் ரூ. 2000/= கடனாகக் கொடுத்தேன்; வட்டி 9 சதவிகிதமே. அந்தக் காலத்தில் ரூ. 2000/= பெரிய தொகை 9 சதவிகித வட்டி மிகக் குறைவானது. காரைக்குடியில் அப்போது, 12:15, 18, 24 சதவிகிதங்கள் புழக்கத்தில் இருந்தன. அரிசி விலை ரூபாய்க்கு ஒரு படி ஒன்றரை கிலோ அடிக்கடி அக்கடையில் உட்கார்ந்ததால் ஏற்பட்ட விளைவு

5 குறள் - 443