பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V. சொக்கலிங்கம் பிள்ளை 77

அங்கும் பதிவு பெற முடியவில்லை. ஒருநாள் (1964) துணை வேந்தரிடம், "ஐயா. தாங்கள் பல்வேறு விதமாகப் பேசி Ph.D.க்குப் பதிவு செய்து கொள்ள மறுத்தால் நான் கும்பகோணம் வழியைக் கையாள வேண்டியதுதான்." என்று சொல்லி வைத்தேன் கும்பகோணம் ஹோமியோதிபதி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ. 100 - அக்காலத்தில் இதுதான் கட்டணம் அஞ்சல் வழி கற்றேன். இத்தேர்வு ஓர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரின் பார்வையில் நடைபெற வேண்டும் என்பது விதி.

1960-66 வரை குடும்பம் காரைக்குடியில் இருந்தது நான் ஆண்டிற்கு மூன்று முறை திருப்பதியிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தேன். சொக்கலிங்கம் பிள்ளையின் பார்வையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்து கொண்டேன். ஒரு விடுமுறையில் தேர்வு எழுதி விடைத்தாள்களை கும்பகோணத்திற்கு அனுப்பச் செய்தேன். ஓரிரண்டு திங்களில் முடிவு தெரிந்தது. டாக்டர் பட்டமும் பெற்றேன். இந்த "நகைச்சுவையான ஏற்பாடு" இன்றும் என் மனத்தில் நீங்காத நினைவாக உள்ளது. இது பல்கலைக் கழகத்தில் Ph.D.க்குப் பதிவு செய்து கொள்ள வழி அமைத்ததால்"

நினைவு - 8 : காரைக்குடியில் இலக்குமிபுர அக்கிரகாரத்தின் அருகில் தம், சொந்த வீட்டில் தம் தம்பியுடன் வாழ்ந்திருந்தார் சொக்கலிங்கம்பிள்ளை. இவர் தம்பிக்கு சினிமா கொட்டகையில் ஏதோ ஒரு சிறுவேலை அவர் அங்குப் பெறும் ஊதியம் வாழ்க்கை நடத்துவதற்குப் போதாது. இவர் உதவியால்தான் தம்பியின் வாழ்க்கை நன்கு அமைந்திருந்தது. இவர் வீட்டுக்கருகில் அக்கிரகாரத்தில் நான் ஒரு வீடு வாங்கினேன். (1966). இதில் பெருவாரியான சாமான்களைப் போட்டுவிட்டுத் திருப்பதி சென்றேன் சிறிதளவு சாமான்களுடன் கடைத் தெருவில் சிறிது கொடுக்கல் - வாங்கல் இருந்ததாலும் தேவகோட்டை சார் நீதிபதி மன்றத்தில் ஒரு வழக்கு இருந்தமையாலும் சில சமயம் காரைக்குடி வர நேரும்.

6 1942இல் சிந்தனையில் எழுந்த "டாக்டர் பட்ட ஆசை" (Ph.D)

வேங்கடவன் அருளால் 1968 இல் நிறைவேறியது.