பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 85

இரண்டாம் ஆண்டில் நான்காம் பாரம் தொடங்க விண்ணப்பம் கல்வி இயக்குநருக்கு அனுப்பப் பெற்றது. ஆனால் கல்வித்துறை மறுத்துவிட்டது அப்போது கல்வி உலகக் கோள்களின் நிலை இது திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி சி இரகுநாதன் பார்ப்பனர் கோவையில் மண்டலக் கல்வி ஆய்வாளர் W.F. அரங்கநாத முதலி யார் பார்ப்பனரல்லாதாருக்கு உதவுபவர் என்ற புகழ் பெற்றவர். சென்னையில் கல்வித்துறை இயக்குநர் ஆர் எம். ஸ்ட்ராத்தம் துரை (வெள்ளைக்காரர்) துறையூர் தொடக்க உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் T.S. இராசகோபாலய்யரைக் கேட்டு அவர் யோசனைப்படி விண்ணப்பம் அனுப்பியிருக்க வேண்டும் திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் பார்ப்பனச் சூழ்நிலை. எல் கணபதி அய்யர் தலைமை எழுத்தர். விநாயகப்பெருமான்போல் அனைவரையும் ஆட்டவல்ல ஆற்றல் புடைத்தவர். இவரை அக்காலத்தில் L.G. பெருங்காயம் என்ற சாட்டுப் பெயரால் பள்ளி நிர்வாகம் வழங்கியது. இவரை நம்பித்தான் இராசகோபாலய்யர் துரைமார்கட்குத் துணிவு கொடுத்து நம்பிக்கை ஊட்டியிருக்க வேண்டும். துரையை விட மூத்தவர்; அதனால் அவர் சொல்லுவதை நம்பி நான்காவது பாரம் திறக்க விண்ணப்பம் அனுப்பியிருக்க வேண்டும் தொடக்க நிலைப் பள்ளித் தலைமைசிரியருடைய சிந்தனைக்கும், விண்ணப்பம் தயாரிக்கும் திறனுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தவிர, வெள்ளையர் ஆட்சிக்கார வர்க்கம் 90 விழுக்காடு பார்ப்பனர். அதனால் ஆணவம் மண்டைக் கொழுப்பாக இருந்தது. அதனைப் புரிந்து கொண்டு அவர்களை அணுகும் முறையில் சமாளிக்க முடியும் நிலைமையும் இருந்தது. ஒரு சில அலுவலகத் தமிழர்கள் அதற்குள்ள வழி முறைகளையும் தெரிந்து வைத்திருந்தனர்.

இரண்டு துரைமார்களும் கோடையில் ஊட்டிக்குச் சென்றிருந்தபோது கோவையில் இருந்த V.R. அரங்கநாத முதலி யாரைப் பார்த்து நான்காவது பாரம் தொடங்குவதுபற்றிப் பேசி அநுமதி வழங்கப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். பார்ப்பனரல்லாதர்க்குரிய பள்ளிகட்குச் சலுகை காட்டுவார் என்று