பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|14. பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் "சோழநாடு சோறுடைத்து" என்பது எல்லோரும் அறிந்த முதுமொழி நீர்வளம் மிக்க காவிரி பாய்வதால் எங்கும் மருதத்திணை சூழ்நிலையாதலால் தஞ்சை மாவட்டம் "தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்" என்ற சிறப்புப் பெற்று திகழ்கின்றது. வயிற்றுக்கு உணவு மட்டும் தருவதன்று தஞ்சை மாவட்டம். இயல், இசை, நாடகம், என்ற முத்தமிழும் திகழ்ந்து வரும் பகுதி தஞ்சைப் பகுதி, ந.மு. வேங்கடசாமி நாட்டார். வீர. உலக ஊழியனார், வேங்கடாசலம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் தோன்றி தமிழை வளர்த்த இடம் தஞ்சை மாவட்டம், முக்திக்கு வழிகாட்டும் பக்தியை வார்க்கும் .திருக்கோயில்கள் மலிந்த மாவட்டம் இது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 40 திவ்விய தேசங்களும், தேவாரப் பாடல் பெற்ற 190 சைவத் தலங்களும் சோழ நாட்டில் உள்ளவை. "கோயில் நகரம்" எனப் பெயர். பெற்றுத் திகழும் கும்பகோணம் தஞ்சை மாவட்டத்தில்தான் உள்ளது. - - கும்பகோணத்திற்கருகிலுள்ளது திருநாகேசுவரம் என்னும் புகழ்மிக்க சிவத்தலம். இத்தலத்தில் 14197இல் பிறந்தவர் பேராசிரிய வெள்ளை வாரணனார். அடியேனைவிட நான்கு திங்கள் 17 நாள் இளையவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் தமிழ் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பிறந்த தலத்தின் சிறப்பால் இவர் சிறந்த சிவநேசச் செல்வராகவும் திகழ்ந்ததில் 1 இன்னொரு கோயில் நகரமாகிய காஞ்சி தொண்டைநாட்டில் உள்ளது