பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நீங்காத நினைவுகள் வியப்பொன்றும் இல்லை. இவர் படிப்பு முடிந்த தொடக்கக் காலத்தில் கரந்தைத் தமிழ்ச்சங்கத் தமிழ்க் கல்லூரியில் மிகு புகழ்பெற்ற திரு உமாமகேசுவரன் பிள்ளையின் அரவணைப்பில் ஒராண்டு தமிழாசிரியராகப் பணியேற்றியதாக நினைவு. அப்போது அடியேன் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் (1934 - 39 பயின்று கொண்டிருந்தேன். இக்காலத்தில் தமிழகப் பிரதமராக இருந்த நம் அருமை இராஜாஜி தமிழ் நாட்டுக் கல்வித் திட்டத்தில் இந்தி மொழியைக் கட்டமாயமாகப் புகுத்த நினைத்தபோது திரு. வெள்ளை வாரணனார் "காக்கை விடு தூது" என்ற கவிதையின் மூலம் மறுப்பு தெரிவித்தது இன்னும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. 1935 முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ்ப்பணியைத் தொடங்கி விட்டார். அடியேனும் பிஎஸ்சி. பட்டத்துடன் சைதையிலுள்ள ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஓராண்டு (1940-41 பயின்று எல்.டி. பட்டம் பெற்றுத் துறையூரில் புதிதாகத் தொடங்கப்பெற்ற நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பொறுப்பேற்று ஆசிரியப் பணியைத் தொடங்கிவிட்டேன். துறையூரில் பணியாற்றியபோதும் (1941-50), பின்னர் காரைக்குடி அழகப்பர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபோதும் இச்சான்றோரிடம் நல்ல தொடர்பு இருந்து வந்தது. திருப்பதி சென்ற பிறகு 1960-1977 காலத்தில் நெருங்கிய பழக்கமாயிற்று, திருப்பதியில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகளில் பங்குபெறச் செய்தேன். இவருடன் வாழ்வில் நேரிட்ட நிகழ்ச்சிகளை நீங்காத நினைவுகளாக இங்கும் பதிவு செய்து மகிழ்கின்றேன். நினைவு - 1 : காரைக்குடிக் கல்லூரிப் பணியில் அதிக ஓய்வு இருந்தது. பணி புதிதாகையால் அப்பணியைத் திறம்பட ஆற்றுவதற்குப் மொழி பயிற்றும் முறைகள் கல்வி உளவியல் பற்றிய ஆங்கில நூல்கள் பலவற்றைப் பயின்று கருத்துகளைத் தமிழில் அமைத்துக் கொள்ளவேண்டிய நிலை. முதல் ஆறு ஆண்டுகள் என் முழுநேரத்தையும் இப்பணியிலேயே செலவிட்டேன். அப்போதுதான் பயிலும் ஆசிரிய மாணாக்கர்கள் மனநிறைவு அடையும் வண்ணம் போதிக்க முடியும். இதன் விளைவு