பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வெள்ளைவாரணனார் 221 1 தமிழ் பயிற்றும் முறை 2 அறிவியல் பயிற்றும் முறை )ே கல்வி உளவியல் என்ற மூன்று பெரியநூல்கள் வெளிவந்தன. அவை இன்றளவும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பயிலும் மாணாக்கர்கட்கும் மனநிறைவு தருவனவாக அமைந்துள்ளன. இக்காலத்தில்தான் "கவிதையநுபவம்" 1961 என்ற நூலும் உருவாயிற்று தினமணிக்கதிர், தினமணிச்சுடர் "தமிழ் நாடு', 'கலைமகள் "குமரிமலர் முதலிய பருவ வெளியீடுகளில் என்னுடைய கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இக்காலத்திற்குப் பிறகு ஹெய்சன்பெர்க் எழுதிய Nuclear Physics என்ற ஆங்கில நூலை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டேன். அனுபற்றி அழகாக ஆராயவேண்டியிருந்தது. கல்லூரியில் இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை ஆழ்ந்து பயின்ற அறிவு இப்போது கை கொடுத்து உதவியது. மொழிபெயர்ப்பு நூலாகிய "அனுக்கரு பெளதிகம்" சென்னைப் பல்கலைக்கழகப் பரிசையும் (1958) பெற்றது. ஆக்கமுறையில் அணுவின் ஆற்றல் பயன்படும் முறைகளைப்பற்றி ஆராய என் மனம் அவாவியது. அவைபற்றிய நூல் ஒன்றும் உருவாகியது. சென்னை அமெரிக்க நூலகத்திலிருந்து பெற்ற நூல்கள் இதற்குப் பெருந்துணை புரிந்தன. தாருகவனத்து முனிவர்கள் செய்த அபிசாரயாகம்பற்றிய செய்தி அறிய வேண்டியிருந்தது. அதற்கு மூலம் தெரியவில்லை. திரு. க வெள்ளை வாரணனாருக்கு எழுதினேன். அக்காலத்தில் அவர் ஓர் இலக்கியக் களஞ்சியமாக எனக்குப் பயன்பட்டார். அவர் கந்தபுராணத்திலுள்ளது என்று குறிப்பு முதல்யவற்றுடன் விளக்கமாக எழுதினார். "தமிழ்க் களஞ்சியம் போல் வேண்டும் போதெல்லாம் அவருடைய உதவியைப் பெற்றுவந்தேன். தாருகவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காகத் தாம் இயற்றிய அபிசாரயாகத்தினின்றும் கிளப்பிவிட்ட கொல்புலி யைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார். கொடிய நஞ்சு கக்கும் அரவங்களை ஆபரணங்களாக்கிக் கொண்டார். ஆலமுண்ட நீலகண்டன் சிங்கம் அம்பிகைக்கு வாகனமாயிற்று. அடுத்து அவர்கள் ஏவிய முயலகன் என்ற