பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நீங்காத நினைவுகள் அரக்கனைத் தம் காலின்கீழ் அடக்கிக் கொள்ளுகின்றார். இதுபோல ஹிரோஷிமா, நாகசாகி என்ற ஜப்பானிய நகரங்களை அழிக்கப் பயன்பட்ட அணுவாற்றல் மக்கள் வாழ்வின் பொருட்டுப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனையில் என் மனம் சென்றது. கந்தகம், பாஸ்வரம் போன்ற தீங்கு விளைவிக்கும் கொடிய வேதியியல் பொருள்கள் இலேகியம், களிம்பு போன்ற மருந்துப் பொருள்களாகும்போது, தம்முடைய தீயகுணங்களை இழந்து நற்பண்புகளைப் பெறுதல் போல அணுவாற்றல் ஐசோடோப்புகள் (isotopes) என்ற கதிரியக்கப் பொருள்களாக மாறும்பொழுது அவை (1) உயிரியல் ஆய்வு (2) மருத்துவத் துறையில் பயன் 13 வேளாண்மைத் தொழிலில் பயன் (4) தொழில் துறையில் பயன் என்பவற்றில் பயன்படும் முறைகளையெல்லாம் அறிய முடிந்தது. அணுவாற்றல் மின்னாற்றலாக மாற்றப்படும் முறைகளையெல்லாம் அறிந்து கொண்டேன். - அணுவின் கருவில் அடங்கியிருக்கும் ஆற்றல்-இன்று பலமுறைகளில் பயன்படுகின்றது. அது நவமணிகளின் பேழையாக விளங்குவதையும் கண்டு கொண்டனர். அது கடவுட்டன்மை வாய்ந்த ஒரு பெட்டி எனவும் உணர்ந்து கொண்டு விட்டனர். மூலபண்டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே' நினைவு - 2 : திருப்பதிக்குப் பலமுறை வரும்போதெல்லாம் அவர் என் இல்லத்தில் விருந்தினராகத் தங்குவார். தமிழிலக்கியம்பற்றியும், திருமுறைகள்பற்றியும் சல்லாபங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கும். ஒருமுறை நான் திருப்பதி உமாமகேசுவரரெட்டி குடியிருப்பில் (கபிலதீர்த்தம் சாலை, திருப்பதி தங்கியிருந்தபொழுது 1967 இவர் என் விருந்தினராக இருந்த பொழுது அதிகாலையில் எழுந்து சுமார் ஒருகல் 2 திருவாசகம் - 523 என்ற மணிவாசகப் பெருமான் பாடிய மூலபண்டாரம் வைத்து மூடிய பெட்டி இதுதுான் என்பதையும் தெரிந்து கொண்டு விட்டனர். -