பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15

 வாகத்தானிருக்க வேண்டும். சிற்றுண்டி என்று பெயர் வைத்து வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, சர்க்கரை சேர்ந்த திண் பண்டங்கள் முதலியவைகளை தினம் சாப்பிடுவது தவறாகும். காலை யில் எழுந்தவுடன் சிற்றுண்டி சாப்பிடுவதென்றால் ஒன்றிரண்டு இட்டலியோ, ஆப்பமோ கொஞ்சம் ரொட்டியோ ஏதாவதொன்றை சிற்றுண்டியாக அருந்தலாம். சாயங்காலத்திலும் அப்படியே சிற் றுண்டியாக ஏதாவது கொஞ்சம் உட்கொள்ளலாம். இந்த முறை நல்லதேக வண்மையுடையவர்கள் சாப்பிடும் மார்க்கமாகும். 50 வயதுக்கு மேல்பட்டவர்கள் சாப்பாட்டை எவ்வளவு குறைத்து கொள்கிறார்களோ அவ்வளவும் நல்லது. அவர்கள் சிற்றுண்டியை ஏதாவது பானத்துடன் நிறுத்திக்கொள்ளல் நல்லது. இம்முறையை நான் எனது 70 ஆண்டுவரை அனுஷ்டித்து வந்தேன். அதற்குமேல் வயித் தியர்கள் எனக்கு போதித்தபடி ஒரு நாளில் நான் சாப்பிடவேண்டிய உணவின் மொத்தத்தை நான்கு கூராக்கி காலை 8 மணிக்கு ஒரு கூறு, 12 மணிக்கு ஒரு கூறு, சாயங்காலம் 4 மணிக்கு ஒரு கூறு, இரவு 8 மணிக்கு நான்காவது கூறாக புசித்து வருகிறேன். இப்படி செய்வதற்கு காரணம் வைத்தியர்கள் என்ன கூறுகிறார்களென்றால் வயது முதிர்ந்தவர்கள் வயிறு நிரம்ப எப்பொழுதும் சாப்பிடக்கூடாது. வயிறு உப்பி மேலிருக்கும் ஹிருதயத்தின் தொழிலுக்கு கோளாறு உண்டாக்குகிறது என்பதாம். இந்த கஷ்டத்தை ஏகதேசமாக பெரிய விருந்துகளில் நான் சாப்பிட்டால் பிறகு நான் அனுபவித்திருக்கிறேன்.ஆகவே வயோதிகர்கள் எப்பொழுதும் வயிறு நிரம்ப புசிக்கவே கூடாது. இதற்காக இன்னொரு முறையும் அனுஷ்டித்து வருகிறேன் என்னுடைய நண்பர் ஒருவர் 50 வயதுக்கு மேற்பட்டவர் கொஞ்சம் பலஹீனமான ஹீருதயத்தை உடையவர் ஜெர்மனி தேசத்திற்கு போயிருந்தபோது அங்குள்ள ஹீருதயத்தில் பரிட்சைபெற்ற மிகுந்த பெயர் பெற்ற வைத்தியர் ஒருவரின் சிகிச்சையை நாடியபோது அவர் அடியிற் கண்டவாறு கூறினராம்-'நீங்கள் பாதி வயரு க்குமேல் எப்பொழுதும் சாப்பிடக்கூடாது, அன்றியும் அப்படி சாப்பிட்டவுடன் அதிகமாக தாகத்திற்கு சாப்பிடக்கூடாது அச்சமயத்தில் தாகம் அதிகமாக எடுத்தால் மெல்ல இரண்டு மூன்று மிணறுகள் சுடு ஜலத்தை சாப்பிடுங் கள் பிறகு இரண்டு மணி நேரம் பொருத்து வேண்டிய அளவு சாப் பிடலாம்" இந்த முறையையும் நான் அனுஷ்டித்து வருகிறேன். இதனால் நான் நல்ல பலன் பெற்றேன் என்றே கூறவேண்டும்.