பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

 இரத்தம் தங்கி அவன் மனதை சலனப்படுத்திக்கொண்டிருப்பதுதான்: ஆகவே அந்த ரத்தத்தை குறைத்து மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான் சரியான மார்க்கம் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர். சாதாரண மாக அநேக வைத்தியர்கள் கூறும் மார்க்கம் வேறொன்றையும் யோசி யாமல் ஒன்று, இரண்டு, மூன்று என்று நூறுவரையில் மனதில் எண் ணிக்கொண்டே போனால் நித்திரை வந்துவிடும் என்பதாம். இதைப் பற்றி இங்கு இன்னொரு சிறுகதை ஒரு வைத்தியர் தூக்கமின்மையால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் 'இம்மாதிரி சும்மா எண்ணிக் கொண்டு போவதைவிட நீ ஒரு நெருங்கிய பாதையில் நின்று கொண்டு அப்பாதையின் வழியாக ஒரு பெரிய மந்தையில் உள்ள ஆடுகள் ஒவ்வொன்றாக தாண்டிக் கொண்டு போவதுபோல் நினைத்துக் கொண்டு அந்த ஆடுகளை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு வா' என்றனராம்; மறுநாள் வைத்தியர் அம்மனிதனை கேட்டபோது அம். மனிதன் இவ்வாறு பதில் உரைத்தானாம். " நான் ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு வந்தேன் 83 வரையில் எண்ணியவுடன்" என்று கூறி மேலே சொல்ல சற்று தயங்கினராம். அப்போது வைத்தியர் " உடனே தூக்கம் வந்து விட்டதா” என்று கேட்டனராம். அதற்கு அம்மனிதன் தூக்கம் வந்து விட்டது ஆனால் எனக்கல்ல மற்ற ஆடு களுக்கு ' என்று பதில் உரைத்தாராம்! இனி இவ்விஷயத்தில் என் அனுபவத்தை எழுதுகிறேன். எனது 60 ஆண்டுவரையில் எனக்கு தூக்கம் இன்மை என்பதே கிடையாது. இரவில் சாப்பிட்டானவுடன் படுக்கையில் போய் படுக்கவேண்டியதுதான். மறுநாள் காலை 6 மணி வரையில் ஒரே தூக்கம்தான் கும்பகர்ணனுடைய கிருபையால் அதற்குமேல் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கம் குறைந்துக்கொண்டே வந்தது. அதற்காக நித்திரையை வரவழைக்கும் மார்க்கத்தை தேட வேண்டியவனானேன். இரவில் ஏதாவது காரணத்தால் தூக்கம் வராமல் போனால் உடனே எழுந்து எங்கள் வீட்டு மேல் மாடியில் உலாவுவேன். கால்கள் சோர்வு அடையுமுன் என் மூளை சோர் வடைந்து தூங்கி விடுவேன். இந்த உபாயத்திலும் தூக்கம் வரா விட்டால் ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்தால் சில நிமிஷங்களுக்கெல் லாம் தூக்கம் வந்து விடும். ஏறக்குறைய 80-வது வயது வரையில் இந்த சிகிச்சைகளே போதுமானவையாயிருந்தன. சென்ற 2, 3 வருடங்களாக நித்திரையின்மை எனக்கு கொஞ்சம் கஷ்டம் கொடுத்து கொண்டு வருகிறது. இப்பொழுது இரண்டு மார்க்கங்களை அனுஷ் 4.