பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5

5 கெடுக்கிறது. பல நாட்கள் இம்மாதிரியாக ஜீரண சக்தி கெட்டால் வயிற்று நோய் உண்டாவது திண்ணம். நம்மவர்களுக்குள் மேற்சொன்ன விதி அவ்வளவாக அனுஷ்டிக் கப்படுவதில்லை. பெரும்பாலோர் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத் தால் உடனே அதை புசிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒருவனுடைய பந்துக்களோ சிநேகிதர்களோ மிகவும் குற்றவாளிகள் ஆகிறார்கள் நம்முடைய வீட்டிற்கு யாராவது வந்தால் அவர் சாப் பிடும் வேளை எப்பொழுது என்று கவனிப்பதில்லை. ஏதாவது பலகாரம் பழங்கள் முதலியவைகள் கொண்டுவந்து கொடுத்து அவர் களை உண்ணும்படி நிர்ப்பந்திப்பது வழக்கமாயிருக்கிறது. இவ்வாறு என்னை யாராவது நிர்ப்பந்தித்தால் அவர்களுக்கு ஒரு பதில் வைத் திருக்கிறேன். அதாவது நீங்கள் நான் சாப்பிடுவதற்குத் தானே இதை கொடுக்கிறீர்கள், என் உடல் நலத்தை கெடுக்க வேண்டுமென்று உங்களுக்கு விருப்ப மிருந்தால் சொல்லுங்கள் இப்பொழுதே சாப்பிடு கிறேன். இல்லை என் தேக ஆரோக்கியத்தை நான் காப்பாற்றிக் கோள்ள வேண்டுமென்று விருப்பமிருந்தால் இவைகளை யெல்லாம் ஒரு பொட்டலமாக கட்டி கொடுங்கள் என் வீட்டிற்கு கொண்டுபோய் நான் மறுமுறை சாப்பாடு கொள்ள வேண்டிய காலத்தில் இவற்றை யெல்லாம் புசிக்கிறேன். உங்களை வாழ்த்திவிட்டு ' இவ்விஷயத்தைப் பற்றி எழுதும் பொழுது சென்ற ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பாக பிரபல வைத்தியராகிய டாக்டர் ஹாலர் என்பவர் செய்த யுக்தியை இங்கு எழுத விரும்புகிறேன். அவருக்கு கைராசி அதிக முண்டு என்று அவரை தினம் பன்முறை நோயாளிகள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவார்கள் ; அப்படி போஜனமோ சிற்றுண் டியோ கொள்ள வேண்டிய நேரத்தில் தூரப் பிரயாணம் செய்ய வேண்டி வந்தால் அவர் சாப்பாட்டு பெட்டியை தன் வண்டியில் எதிர் பக்கம் வைக்கச் சொல்லி வண்டி போய்க்கொண்டிருக்கும் பொழுதே தன் சாப்பாட்டை முடித்துவிடுவார். எதையும் செய்ய வேண்டு மென்று மனம் வைத்தால் வழி பிறக்கும். சில விஷயத்தில் மற்றொருவருடைய உதாரணத்தை எடுத்துரைக் கின்றேன். சமீபத்தில் காலஞ்சென்ற பெர்னாட்ஷா என்னும் உலகப் பிரசித்திபெற்ற நாடக ஆசிரியர் தான் தினம் சிற்றுண்டி கொள்ள வேண்டிய காலம் வந்தால் அவர் எந்த இடத்தில் இருந்தபோதிலும்