பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

蔷 என்ன வேலையில் இருந்தபோதிலும் வழக்கத்தை அனுசரித்து வருவா ராம். அதற்காக தன் சிற்றுண்டியை தன் பெரிய ஜோபியில் தினம் எடுத்து செல்வாராம். இப்பெரியார் தனது 94-வது வயதில் தான் காலமானார் என்பது கவனிக்கத்தக்கது.


(3) இப்பகுதியில் நாம் அனுஷ்டிக்க வேண்டிய் மூன்றாவது விதி நாம் எதை புசித்தாலும் நன்றாய் மென்று புசிக்க வேண்டுமென் பதாம். இவ்விதியை உலகில் உள்ள எல்லா வைத்தியர்களும் ஒப்புக் கொள்வார்கள். ஆயினும் இச்சிறிய விதியை பின்பற்றி நடக்கும் மனி தர்கள் மிகவும் குறைவு என்றே கூறவேண்டும். இவ்விதியை தக்க படி அனுஷ்டியாது பின்பு தேக ஆரோக்கியம் குன்றி நோய்க்கு உள் ளாகும் மனிதர்களுள் வக்கீல்களே முக்கியமானவர்கள். காலை எழுந்தவுடன் பத்தரை மணி வரை கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண் டிருப்பது இவர்கள் வழக்கம்; அதன் பிறகு ஐயோ மணியாய்விட் டதே கோர்ட்டுக்கு 11 மணிக்கு எல்லாம் போகவேண்டுமே ' என்று அவசரப்பட்டு போஜனத்தை 'லபக் லபக் என்று விழுங்கிவிட்டு விரைந்து செல்வது இவர்களுள் சாதாரண வழக்கம். இப்படிச் செய்தால் சில வருடங்கள் தாங்கும். பிறகு வயிற்று நோயால் நடுவயதி லேயே கஷ்டப்பட வேண்டிவரும் என்பதற்கு ஐயமில்லை, புசிப் பதற்கு இத்தனை தரம் மெல்ல வேண்டுமென்று கணக்கிட்டு புசித்து வருவதில் என்ன கஷ்டம் இவ்விஷயத்தில் காலம் சென்ற ரைட் ஆனரபிள் (W. E) கிலாட்ஸன் என்னும் சிறந்த மேதாவியின் வழக் கத்தை இங்கு எடுத்து எழுதுகிறேன். அவருடைய ஜீவிய சரித்திரத் தில் அவர் சிறு வயது முதல் உண்ணும் ஒவ்வொரு கவளத்தையும் 40 முறை மென்றே விழுங்குவார் என்பதை நான் படித்தது ஞாபக மிருக்கிறது. இதை படித்தபோது ஒவ்வொரு கவளத்தையும் 40 முறை மென்று தின்னுவது என்றால் எத்தனை நாழி பிடிக்கும் என்று ஆச்சர்யப்பட்டேன். பிறகு ஒரு நாள் ஏதோ பலகாரத்தை வாயில் போட்டுக் கொண்டபோது சுமாராக எத்தனை தரம் மெல்லுகிறோம் என்று பரீட்சை பார்த்தேன். சாதாரணமாக எனக்கு 30 முறை பிடித்தது விழுங்குவதற்கு, ஆகவே இது கஷ்டமான வழக்கம் அல்ல என்று தீர்மானித்து 40 முறைக்கு குறையாமல் மெல்லும் பழக்கத்தை என் கத்திற்குக் கொண்டுவந்தேன். சாப்பிட உட்கார்ந்தால் இந்த வழக்கம் என் சாப்பாட்டை முடிக்க மற்றவர்களை விட கொஞ்சம் அதிக நாழிகுதான் ஆகிறது. கலியாணம் முதலிய காலங்களில் பங்தியாக