பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-5–


   சீவகாருண்ய ஒழுக்கம் இல்லாதபோது தாட்சண்ய மனப்பண்பும் தழைக்கமாட்டாது. சீவகாருண்யம் என்கின்ற திறவுகோல் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து, எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழ முடியும். இந்தச் சீவகாருண்ய ஒழுக்கம் இல்லையானல் ஞானம், யோகம், தவம், விரதம், சபம், தியானம் முதலியவை இருந்தாலும் கடவுள் அன்பிற்கு உரியவர் ஆகமுடியாது.

     “மருவாணைப் பெண்ணுக்கி ஒருகணத்தில் கண்விழித்து
          வயங்கும் அப்பெண்
      உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற
           உருவ னேனும் (துண்ணும்
      கருவாணை உறஇரங்கா துயிர் உடம்பைக் கடிந்
           கருத்த னேல்எம்
      குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானியென
           கூறொணாதே ’’

என்று இராமலிங்க வள்ளலார் கூறியதைக் காண்க.

   சீவகாருண்ய ஒழுக்கத்தை மேற்கொண்டவர்கள் சூலை, குன்மம், குட்டம் முதலிய நோயினால் துன்புற மாட்டார்கள். அவர்கட்குச் சீவகாருண்ய ஒழுக்கமே நன்மருந்தாக அமைந்து அந் நோய்களைப் போக்கும்.