பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
— 4–


தாகம், பயம் உற்றவர்களின் பசியைப் போக்காதவர்களாய், தாகத்தைத் தணிக்காதவர்களாய், பயத்தை நீக்காதவர்களாய் இருந்த காரணத்தினால் என்க. இதனை அழகுற விவேக சிந்தாமணி என்னும் நூல்

மண்ணாா் சட்டி கரத்தேந்தி
   மரநாய் கெளவும் காலினராய்
அண்ணாந்தேங்கி இரப்பாரை
   அறிந்தோ மறிந்தோம் அம்மம்ம
பண்ணார் மொழியார் பாலடிசில்
   பைம்பொன் கலத்தில் பரிந்தூட்ட
 உண்ணா நின்ற பேர்தொருவர்க்கு
    உதவா மாந்தர் இவர் தாமே

என்று கூறுகிறது. அதாவது, “மண் சட்டியைக் கையில் கொண்டு, உடல் மெலிந்த தோற்றத்தினராய் ஏங்கிப் பரிதாபத்தோடு பிச்சை எடுப்பவர் யார் என்னில், இவர்கள் முற்பிறப்பில் இறைவன் கொடுத்த பெருஞ் செல்வக் குடியில் பிறந்து அன்பு நிறைந்த தம் மனைவியர் பொன் பாத்திரத்தில் பால் உணவினை அன புடன் ஊட்டுகையில் ஏழைகள் உணவு தருமாறு கெஞ்சிக் கேட்டபோது ஒருவர்க்கும் உதவி செய்யாத இரக்கமற்ற உலோபிகளே ஆவர்” என்பதாம்.