பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
—3—


போது, அறிவும் அன்பும் மறைந்து உபகார மனப் பண்பும் தோன்றப்பெறாது,தீமைகளே மேலோங்கி கிற்கும். புண்ணியம் ஆவது சீவகாருண்யம்; பாவ மாவது சீவகாருண்யம்; இல்லாமையாகும். இதனை வள்ளுவனாா்,

        அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் 
        பிறவினை எல்லாம் தரும்

என்று எத்துணைச் சுருக்கமாகக் கூறியுள்ளார் பாருங்கள்? அதாவது, “புண்ணியமாவது பிற உயிர்களைக் கொல்லாமையாகும். கொல்லும் தொழில்,மேற்கொண்டால் அத்தீத் தொழில் பிற எல்லாத் தீமைகளையும் கொடுக்கும்.” என்பதாம். சீவகாருண்யத்தை மேற்கொள்வதனால் வரும் தெளிவே, கடவுள் தெளிவு. அதாவது சிவவிளக்கம், என்றும், சீவகாருண்யத்தால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும் கருதப்படும்.

     கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள் துன்பப் படும்போது, துக்கப்பட வேண்டியது மனித இயல்பாக - அதாவது உரிமையாக - உள்ள பண்பாகும்.உலகில் மக்கள் பசி, தாகம்,பயம் முதலியவற்றால்  துன்புறுவதைக் காண்கின்றோம். “ இவர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர்?” எனில், இவர்கள் முன் பிறவியில் பசி,