பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-2-


சீவகாருண்யத்தைத் தம் வாழ்க்கையில் கடைப் பிடித்த பெரியோர்களின் வரலாற்றைப் படித்த பின் பேனும், சீவகாருண்யத்தின் அருமை பெருமைகளே உணர்ந்த பின்பேனும், இந்தச் சீவகாருண்யப் பண்பினை மேற்கொள்ளத் தொடங்குகிறது. இனி, முன்னர் சீவகாருண்யம் இன்னது என்பதையும், பின்னர் சீவகாருண்யத்தை வற்புறுத்தித் தம் வாழ்க்கையில் ஆதனை மேற்கொண்டு ஒழுகிய பெரியார் ஒருவருடைய வரலாற்றையும் காண்போமாக.

  உலகில் மனிதப் பிறப்பைப் பெற்றுக்கொண்டவர் இப் பிறப்பிலேயே அடையத்தக்க இறையருளைக் காலமுள்ளபோதே பெற முயலவேண்டும். " இறைவன் அருளைப் பெற வழி எது? அதிலும் எளிய முறையில் அடையும் நெறி எது ?' எனின், அதுவே சிவகாருண்ய ஒழுக்க முடையவராய் இருப்பதேயாகும். மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல, புள்ளைக் காட்டிப் புள்ளைப் பிடிப்பது போல, உயிர்களிடத்தில் அருளைக் காட்டி இறைவன் அருளைப் பெறவேண்டும். இதனையே ஞான வழி ஏன்றும் கூறலாம். சீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாகவே விளங்கும். இவற்றால் பிறவற்றிற்கு உதவி செய்ய வேண்டுமென்ற உள்ளம் ஏற்படும். இந்த உபகார மனப்பான்மை, மற்றைய எல்லா இன்பங்களையும் தந்து நிற்கும். சீவகாருண்ய ஒழுக்கம் மறைந்த