பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

~6~

சத்தியற்றவர்களும் சிவகாருண்யத்தை மேற்கொண் டால், உடல் உரம் வாய்க்கப்பெறுவர். அற்ப வய துடையவர்கள் என்று அயனல் விதிக்கப்பட்டவர் களும் சீவகாருண்ய ஒழுக்கத்தால் கிரம்பிய ஆயுளேப் பெறுவர். கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியன பெற்று வாழ விரும்புகின்றவர்கள் சிவகாருண்ய பண் பினே மேற்கொண்டு ஒழுகவேண்டும். இந்த உயிர் இரக்கப்பண்பு உடையவரைக் கோடை வெயில் கொளுத்தாது. மண்ணும் குடு செய்யாது. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலியன ஒன்றும் செய்யமாட்டா. கச்சுக் காற்றும் சுரமும் துன்புறத்தமாட்டா. ஆற்று வெள்ளம். கள்ளர் பயம், பகைவரால் ஏற்படும் துன்பம் முதலி யனவும் நெருங்கமாட்டா.

சீவகாருண்யமுள்ள உழவர்கட்கு உழவு கற் பலன் அளிக்கும். வணிகர் மேற்கொள்ளின் வாணிபத் தில் பேரூதியம் கிடைக்கப்பெறுவர். தொழில் துறை யில் இருப்பவர்கட்குமேல்மேலும் பதவி உயர்ந்து,மாக ஊதியம் பெருகும். சீவகாருண்யமுடையோர் துட்ட விலங்குக்ளாலும் துன்பம் ஏற்படாத நிலையினைப் பெறுவர் ஆண்ட் ரக்கிள்ஸ் என்றவன் சிங்கத்தின் பாதத்தில் இருந்த முள்ளைத் தனக்குள்ள சீவகாருண் யத்தினல் எடுத்துவிட்ட காரணத்தால் அச் சிங்கத் தையே கொண்டு அவனைக் கொல்லுமாறு செய்த,