பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一锡一 மண்ணினில் வலையும் நூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம் எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைதின் திருவருள் அறியம் ” இப் பாடல்களைப் பயிலுங்கள். பயின்றபோதே சீவ காருண்ய ஒழுக்கம் நிச்சயம் வாய்க்கப் பெருதிருப் பினும் வாய்க்கப்பெறுவீர். இனி இப் பெருமானர் வரலாறு இன்னதெனவும் அறிவோமாக. தண்டமிழ் நாட்டின் தலைசிறந்த நாடுகள் நான்கு. அவையே சேர, சோழ, பாண்டிய, தொண்டை, நாடு கள் எனப்படும். அவற்றுள் சோழ காட்டின் சிறப் புறு ஊர்களுள் சிதம்பரமும் ஒன்று. அச் சிதம்பரத் திற்கு வடமேற்கில் ஒரு காத தொலைவில் மருதுரர் என்னும் மாண்புறும் ஒர் ஊர் உளது, அவ்வூரில் அன்பு, அறிவு, இரக்கம் வாய்க்கம்பெற்ற கருணிக குல திலகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவரது திருநாமம் இராமய பிள்ளை என்பது. அவர் கல்வி, கேள்வி களிலும் தலைசிறந்தவர். கடவுள் அடியாரை அன் புடன் உபசரிப்பதிலும் மேலானவர். இத்தகைய பெரியார் இல்லறத்தை இனிது கடத்த இவரது சுற்றமும் நட்பும் சூழ்ந்து, சின்னம்மை என் இனும் பெயருடைய அம்மையாரை மணமுடித்து இல் லறத்தில் இவ்விருவரையும் புகுத்தினர். இராமய