பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-10-- பிள்ளையும் சின்னம்மையும் இல்லறம் என்னும் கல் லறத்தை இனிது ஏற்று வருவிருந்து உவப்ப ஊட்டி யும் செல்விருந்து காத்தும் துறந்தார்க்கும் துவ்வாதார்க் கும் ஏனையவர்க்கும் இயற்றவேண்டிய கடன்களை இனிதின் இயற்றி வந்தனர். சின்னம்மையாரும் கொண்டானில் தெய்வம் பிறிதில்லை என்ற கொள்கையராய், தெய்வம் தொழாது கணவனுரைத் தொழுது தற்காத்து, தன்னைக் கொண்டானைப் பேணி, சொற்காத்துச் சோர்விலாது கணவன் உள்ளம் உவப்ப ஒழுகி வந்தனர். இராமய பிள்ளை தம் வாழ்க்கையை கடத்த கணக் காயர் (ஆசிரியர்) தொழிலை மேற்கொண்டு, உள்ளுரீ லும் அதற்கடுத்த கருங்குழி முதலிய கிராமங்களி லும் கல்வி பயிற்றுவித்து வந்தார். மனமாட்சிக்கு மங் கலமாகிய பிள்ளைப் பேறு தமக்கு வாய்க்கவேண்டு மென்று போம்பலமுடைய பெம்மானம் தில்லை ஈடராசப் பெருமான வேண்டிவந்தார். வேண்டுவார் வேண்டுவன ஈயும் வேணிப்பிரான் இருவருளால் இராமய பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மூன்று ஆண் மக்களும், ஒரு பெண் மகளும் பிறந்தனர். பிள்ளைப் பேற்ருல் பெருமகிழ்வுகொண்ட தம்பதிகள் இன்புற்று வாழ்ந்தனர். இங்ஙனம் பிள்ளையவர்கள் சின்னம்மையுடன் வாழ்ந்து வருகையில், ஒருநாள் ஒரு வயது முதிர்க்க