பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--•ᎻᎥ-- பெரியார் திருநீறும், கண்டிகையும் கொண்ட திரு மேனியராய்ப் பசித்த தோற்றத்தோடு இவரது இல் லம் வந்துற்றனர். வந்த விருந்தினரை வரவேற்கும் கடப்பாடுடைய சின்னம்மையார் கல்வரவு கூறி வர வேற்று அறுசுவை உண்டியினைப் படைத்தனர். அவ் வறுசுவை உணவை அருந்திய பெரியார், சின்னம்மை யின் சீரிய பண்பினைச் சிறப்பித்துத் திருநீறு அளித்து "சிவகாருண்ய ஒழுக்கத்தையே தம் உயிர் எனக் கொள் பவனும், சமரச சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கு பவனும் ஆகிய ஒரு சத் புத்திரன் உன் வயிற்றில் உதிப்பன் ' என்று கூறிவிட்டுச் சென்ருர். இவ்வாறு கூறிச் சென்றதையும் கடந்ததையும் சின்னம்மையார் தம் கணவனர்க்குக் கழறினர். பெரியோர்களின் வாக்குப் பொய்க்குமோ? ஒருக் காலும் பொய்க்காதன்ருே? ஆகவே, 1823ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஒரு மகவு சின்னம்மையாருக்குப் பிறந்தது. இக் குழந்தையே இராமலிங்க சுவாமிகள் ஆவார். இராமலிங்கர் பிறந்த சின்னட்களுக்குப் பிறகு இராமய பிள்ளை இறைவன் திருவடி அட்ைந்தனர். குடும்பத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு மூத்த மகளுராகிய சபாபதி பிள்ளை எண்பாரைச் சார்ந்தது. சபாபதி பிள்ளே மருதூரில் வாழ எண்ணுது, தம் தாயார் சின்னம்மையார் பிறப்பிடமாகிய பொன்னேரி