பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—-2– யினை அடைந்தார். சபாபதி பிள்ளை காஞ்சி புரம் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்று ஒரு கலாசாலையில் ஆசிரியர் தொழிலை மேற்கொண் டார். தம் இளவலான இராமலிங்கரையும் சபாபதி முதலியாரிடமே கல்வி கற்கச் செய்தார். இராமலிங்கர் ஆசிரியர்பால் அறிந்தது சிலவாயி லும், ஆண்டவன் அருளால் பலவற்றையும் அறிந்து கொண்டார். நல்ல சொற்பொழிவும், பாடல் இயற் றும் பண்பும், ஐயங்களை அகற்றும் அறிவையும் இளமையிலேயே பெற்ருர். இராமலிங்கர் சென்னையில் வாழத் தொடங்கினர். அங்ங்னம் வாழ்ந்தபோது திருஒற்றியூர்த் தியாகேச ரிடம் அன்புகொண்டு அவரைத் தரிசித்து வந்தார். அவருக்குத் தன்கோடி அம்மையார் என்னும் மங்கை நல்லாளே மணமுடித்து வைத்தனர். ஆனால், அம் மங்கையாரோடு அவர் வாழ்வு கடாத்தாமல் துறவு உள்ளத்திலேயே காட்டம் கொண்டு வாழலானர். இராமலிங்கர் வேகாருண்யம் உடையவர். அதுவே,அவரது சிறந்த குறிக்கோள் என்று முன்னர் கூறிளுேம் அல்லவா ? அதற்குப் பல சான்றுகள் அவ ாது வாழ்க்கையில் உண்டு. அவர் வியாசர்பாடிக்குச் சென்று பிரசங்கம் செய்துவிட்டுத் திரும்புகையில், இரவு ஆகிவிட்டமையின், தம் நண்பர்களுடன் கடந்து