பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன் என்பவர். இவருக்குப் பெற்ருேர் இட்ட பெயர் விர பாண்டியன் என்பது. அவ்வியற் பெயருடன் குடிப்பெயராகிய கட்டபொம்மன் என்பதும் இணைந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் என்று வழங்கப்படுவ தாயிற்று. இவ் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760 ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள். இவ்வுலகில் பிறந்த னர் என்க. வீரபாண்டியன் கட்டபொம்மனுக்குப் பிறகு இருவர் பிறந்தனர். அவர்கள் குமாரசாமி. துரைசிங்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். குமாரசாமி பேச்சுத்திறமை குறைந்திருந்த காரண்த் தால், அவரை ஊமைத்துரை என்று குறிப்பிட்டு வந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் கல்ல காளைப் பருவம் உற்றதும், சுற்றத்தார் அவருக்கு வீர சக்கம்மாள் என்னும் மங்கை நல்லர்கள் மணமுடித்து வைக்க, வீர பாண்டியன் கட்டபொம்மன் இல்ல றத்தை இனிது கடத்திவந்தனர். வீரபாண்டியன் பஞ்சாலக் குறிச்சிக்குப் பார்த்திப்ளுகி அவ்வூரை அரசிருக்கையாகக் கொண்டு வாழ்ந்துவந்தார். வீரபாண்டியன் கட்டபொம்மன் காலத்தில் அப் பாஞ்சாலக் குறிச்சி ஆர்க்காட்டு நவாபின் ஆளு. கையின் கீழ் இருந்த்து. அதுபோது அங் நவாபு ஆட். சிக்கு உட்பட்ட சிற்றுர் மன்னர்கள் செலுத்தவேண் டிய கப்பங்களை ஒழுங்காகக் கட்டவில்லை. அப்படிக் கட்டாத சிற்றரசர்களுள் பாஞ்சாலக்குறிச்சி மன்ன