பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்றுவிட்டனன். அங்கும் சென்று பார்த்தபோது சிவகிரிக்குக் கலைக்டர் போய்விட்டதாகத் தெரிய வந்தது. அங்குப் போவதற்குமுன் கட்டபொம்மன் தம்முடன் வந்தவர்களை அனுப்பிவிட்டுத் தாம் தனியே கலேக்டரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறினர். என்ருலும், கட்டபொம்மனைத் தனியே விட்டுச் செல்ல மனம் இல்லாதவர்களாய் உடன் வந்தவர்கள் கூடவே வருவதாகக் கூறினர். அதன்படியே அவர்களுடன் கட்டபொம்மன் கலைக்டரைக் காணப் பின்தொடர்ந்து சிவகிரியிலும் காணப்பெருது. அக் கலைக்டரை இந்த ஊரில் சென்ருல் காணலாம் என்று கூறக் கேட்ட இடங்களுக்கெல்லாம் விடாது பின்தொடர்ந்து, இராம நாதபுரத்தில் அவன் தங்கி இருப்பதை உணர்ந்து அங்கு வந்து சேர்ந்தார். ஜாக்ஸன் இராமநாதபுரத்தில் சேதுபதியின் அரண் மனேக்கருகில் இருந்த இராமலிங்க விலா சத்தில் மேல்மாடியில் இருந்தனன். அவன் கட்டபொம்ம னேத் தனியே காணவேண்டும் எனக் கூற, அவ்வாறே தம்முடன் வந்தவர்களை நிறுத்திவிட்டு, மேலே சென்று கண்டார். தனித்துவந்த கட்டபொம்மனே இதுதான் தாக்குதற்குத் தக்க சமயம் என்று உணர்ந்து, அவர் மீது வரி செலுத்தாத குற்றத்துடன், மற்றும் பல குற்றங்களைக் காட்டிச் சிறை செய்யப்போவதாகக் கூறி, மறைவாக இருந்த படைவீரர்களைக்கொண்டு.