பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–36– சிராப்பள்ளிக்கு வருமாறு கட்டளையிட, அப்படியே அவன் சிறைபிடித்த காரியஸ்த்தருடன் அங்கு சேர்ந்தான். அங்கு அனேத்தையும் விசாரிக்கத் தொடங்கியபோது இராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச் சிகளுக்கு ஆதிகாரணன் ஜாக்ஸன் என்பது அறிந்த பின்னர், அவனைக் கலைக்டர் பதவியினின்றும் விலக்கி, அந்த இடத்தில் லூவிஸ்டன் என்பாரை நியமித்த னர். சிறை சென் ற காரியஸ்த்தரையும் விடுதலை செய்தனர். புதிய கலேக்டர் வீரபாண்டியக் கட்டபொம்ம னைத் தன்னை வந்து காணுமாறு கடிதம் எழுதினன், அக் கடிதம் கண்ட கட்டபொம்மன் " நாட்டில் பஞ்சம் காரணமாக மக்கள் நிலவரி செலுத்தாது சங்கடப் படுகின்றனர். காடு நல்ல விகளச்சலைத் தந்தபின், வரி கொணர்ந்து செலுத்துகிறேன்." என்று பதில் கடிதம் எழுதி அனுப்பினர். பின்னர்ப் புதுக் கலைக்டர் கமுதி என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது, அங்கு வந்து காணுமாறு கட்டபொம்மனுக்குக் கட்டளே யிட்டனன். அக் கட்டளையில் 80 பேருக்குமேல் உடன் கொண்டுவரக் கூடாது என்ற கிபந்தனையையும் பிறப்பித்தனன். இதற்கு இணங்காத கட்டபொம் மன் பலருடன் வந்து கலைக்டரைச் சந்தித்தான். இந்த அவமானத்தைப் பொறுக்கமாட்டாத புதுக் கலைக்டர், சென்னைக் கவர்னருக்குக் கடிதம் எழுதிப் பெரும்