பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—40– நோயைப் போக்கிக்கொள்ள வசதி அற்றவர் உயிரை இழக்க நேரிடுகிறது. அத்தகைய ஏழை மக்கள் மருந்து உதவிகளைப்பெற இலவச மருத்துவச்சாலை களைச் செல்வர்கள் அமைத்துத் தாம் சமூகத்தொண்டர் என்பதை கிலே காட்டலாம். செல்வர்கள் குடியானவர் கட்குச் சொற்ப வட்டிக்குப் பணம் தந்து உழவைப் பெருக்குதலும் தொண்டின் பகுதியைச் சேர்ந்ததே யாகும். இத்தைய சமூகத்தொண்டைச்செல்வர்கள் தாம் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதில்லை. எவரும் இதில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதர கிலே, மக் களின் அறியாமை நிலை, மக்களின் ஒழுகலாற்று கிலே முதலியவற்றை உயர்த்தலாம். இதன் கன்மையினை அறிந்துதான் இதுபோது மாணவ உலகம் இத் தொண்டில் ஈடுபட்டுள்ளது என்று கூடக் கூறி விட லாம். கல்லூரிகளில் பயிலும் ஆண். பெண் ஆகிய இருபாலாரும் சமூகத்தொண்டைச் செய்து வருவதை காம் புதினத்தாள்களில் படித்தும் கேரில் கண்டும் வரு கின்ருேம். இப்படி இம்மாணவர்கள் சமூகத்தொண் டில் ஈடுபடுதற்குக் காரணம், கம் முன்னேர் பலர் இதன் அருமை பெருமை தெரிந்து ஈடுபட்டதே என்று கூறலாம். இம்முறையில் சமூகத்தொண்டில் பாடுபட்டவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களே காம் அறிந்தால், நாமும் இச்சீரிய சமூகத் தொண்டில்