பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一54一 கேடு என்னும் ஊரில் வாழ்பவன். அவனும் அவன் வாழ்க்கைத் துண்ைவியும் அப்பக்கம் வர நேர்ந்ததும் வாய்ப்புடைத்தாயிற்று. பையல் என்ருல் யார்க்கும் பரிவு ஏற்படுதல் இயல்புதானே ? ஆகவே, அழுத குழந்தையின் அருகில் வந்து பார்த்தனர். இளமகனின் எழில்க் கண்டு இன்புற்றனர். மகவின எடுத்து மார் போடு அணைத்துக்கொண்டனர். அம் மகவைத் தம் ஊர்க்கே எடுத்துச் சென்று அன்புடன் சீராட்டிப் பாராட்டிப் பாலூட்டி வளர்த்து வந்தனர். குழந்தை பசுவினல் முதல் முதல் பாலூட்டி வளர்க்கப்பட்ட காரணத்தால், ஆ புத்திரன் என்ற அருமைத் திருநாமத்தையே சூட்டி வளர்த்து வந்தனர். ஆ புத்திரனும் காளொருமேனியும் பொழுதொரு வண் ணமுமாக வளர்த்து, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்பத் கங்தையார் கற்றுக் கொடுத்த கல்வியினேச் செவ்வனே பயின்று வந்தான். இளேஞனுக்கு இளமை முதற்கொண்டே, ஈவு, இரக் கம். அன்பு, அருள் முதலான இன் குணங்களும் வளர்ந்துகொண்டே வந்தன. ஒருநாள் ஆ புத்திரன், ஓர் அந்தணன் இல்லத் திற்குச் சென்ருன். அங்கு ஒரு பசு நன்கு அலங் கரிக்கப்பட்டு, கோட்டிடை மாலை சூட்டிக் கட்டப் பட்டிருந்ததைக் கண்டான். அப் பசு அழகுடன் அலங்கரிக்கப்பட்டிருந்ததேனும், அதன் மருண்ட