பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—55— பார்வையினே ஆ புத்திரன் உற்று நோக்கியபோது, வேட்டுவர் வலேயே சிக்கிக்கொண்ட மான் போன்ற துயரில் பசு அகப்பட்டுக்கொண்டது என்பதை யூகித்து உணர்ந்து கொண்டனன். அப் பசு யாகத் தில் பலி யிடுவதற்காக அங்கு அலங்கரிக்கப்பட்டு இருப்பதை அறிந்துகொண்டான். எவ்வாறேனும் அப் பசுவினக் காப்பாற்றவேண்டுமென்ற கருத்துள் கொண்டான். ஆவிஞல் வளர்க்கப்பட்ட ஆ. புத் திரன் ஆவுக்கு ஆபத்து வருங்காலத்து அவ் வார்த் தைத் தன்னுல் கூடிய அளவு அகற்ருது இருப்பானே? இரான் அன்றே ? எனவே, ஆபுத்திரன் அவ்வில் வத்தில் ஒருபுறம் தன்னே மறைத்துக்கொண்டு, யாவ ரும் இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்தியிருக்கை யில், கள்ளிரவில் பசுவின் கட்டை அவிழ்த்து கடத்திக் கொண்டு வெளியேறினன். சிறிது நேர்த்திற்கெல்லாம் விழித்தெழுந்த அந்தணர்கள் யாகப் பசுவைக் காணுது அலமந்து, அதனைத் தேடிக் கொணரப் புறப்பட்டனர். இவ்வாறு பசுவைப் பிடிக்கப் பரபரப்புடன் அந்த பிராமணர்கள், ஆ புத்திரனேயும் ஆவையும் கண்டு விட்டனர். யாகப் பசுவை அப்பாலன் கவர்ந்து சென்றதால் சீற்றமுற்ற செந்தி அந்தணர்கள் அப் லனே கையப்புடைத்தனர். இங்கனம் ஆப்புத் திரன் மெய் வருந்த அடிக்கப்படுவதைக் க்ண்ட பசு, தான் கம்மா இராமல், தன்னல் தாக்கக்கூடிய அக்