பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயலாமல் " தந்தையே கான் இன்னும் இங்கேயே இருக்கவேண்டுமா?' என்று பலமுறை கத்தியும் பார்த்தான். தந்தை இருந்தால்தானே பதில் கூறமுடி யும்? அவன்தான் இறந்துபோயினனே. கடைசியில் கசபியான்காவும் தீக்கு இரையாகி இறந்தான். இக் கதை நமக்கு அறிவிப்பது யாது அச் சிறுவன் தன் பெற்ருேருக்குக் கீழ்ப்படிந்ததை அன்ருே ? அங்ஙனம் அவன் கீழ்ப்படிந்ததல்ை அன்ருே அவன் புகழ் இன் ஆறும் கின்று நிலவுகிறது. பொய் பேசாமை : தலைபோகும் காரியமாயினும் பொய் பேசாது உண்மையையே கூறுதல்வேண்டும். சான்ருேர் என் ணும் சொல் தமிழில் எல்லாக் குணங்களும் கிறைந்த பெரியோர்களையே குறிப்பிடுவதாகும். அப்படிப்பட்ட சான்ருேர்க்கு விளக்கம் தருவது பொய்யாமையே ஆகும். அதாவது மெய்ம்மையே ஆகும். மெய்ம்மையாவது வெறும் பொய்யினைப் பேசா மல் இருப்பதுமட்டும் ஆகாது. பிறர்க்குத் தீங்கு செய்ய மனத்தாலும் எண்னதிருத்தல் என்றே கூறவேண் டும். வள்ளுவர் இவ்வாறே வாய்மை என்பதற்கு இலக்கணம் கூறுகிரு.ர். "வாய்மை எனப்படுவது யாது எனின், யாதொன் றும் தீமை இலாத சொலல் ' என்பதாம். அதாவது,