பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம வைதீகர்களாகிய தில்லை வாழ் அச்தணர்கட் குக் கட்டளையிட்டருளினர் என்க. இவ்வாறே திரு வரங்கப் பெருங்கோயில் உள்ள திருவரங்கநாதனும் லோகசாரங்கரைக்கொண்டு பாணர் குடியினரான திருப்பாளுழ்வாரைத் தன் முன் கொணருமாறு பணித் தனன் என்க. இக்காலத்திலும் காந்தியடிகளாரைப் போன்றவர் இண்டாமையை ஒழிக்க அரும்பாடு பட் டனர் என்க. அப்பாடு பயன் அளிக்காமல் போக வில்லை. முன்பு இருந்த வைதீக மனப்பான்மை சிறிது சிறிதாகக் குறைந்தது. தீண்டாமை என்னும் தீப்பிணியும் நாளுக்குநாள் நலிந்து, மக்கள் யாவரும் பிறப்பால் ஒன்றே என்ற கிலேயும் ஏற்பட் டுள்ளது. தீண்டாதார், என்பவர்களும் தம்மதிப்பை உணர்ந்து, அவர்களும் கல்லொழுக்கம், கற்பண்பு, தூய்மை முதலியனபெற்று மக்கள் இடையே வாழத் தொடங்கி விட்டனர். உயர்ந்தார், தாழ்ந்தார் என்ற வேறுபாடின்றிக் கல்வி கற்கப்படுதலினல் தீண் டாமை தீந்தொழிகிறது. நாளடைவில் சிறிது கூட இத் தீண்டாமை என்னும் சொல்லுக்கே இடம் இல் லாமல் போய்விடும் என்று கூறிவிடலாம். பழங் காலத்தில்.ஒரு சில மக்கள் தீண் டாமையை விடாப் பிடியாகக்கொண்டிருந்த காரணத்தால் கோவிலுக் குள் அனுமதிக்கப்படாமல் மக்கள் பலர் ஒதுக்கப்பட் டதும், இக்காலத்தே தகர்த்தெறியப்பட்டது. எவ ரும் எவ்வினத்தாரும் ஆலயத்திற்குள் செல்லலாம்.