பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 89

தகையதே. உலகம் பல நிறங்களே யுடைய ஆடை போன்றதாகவும் உள்ளது. ஆகவே பல வேறுபாடுகளில் ஒருமைப்பாடு காண்பதே அறிவுடைமை ஆகும். ஆகவே நிறம் மொழி இனம் முதலிய வற்றல் வேறுபாடு கற்பிக்காமல், ஒருங்கு வாழ முயற்சிப்பதே மேலானது.

காவிக்கமலக் கழலுடன் சேர்த்து எனேக் காத்தருள் வாய் Kaavikkamalak kazhaludan sērththu enaik kaaththarullvaay துாவிக்குலமயில் வாகனனே துணையேதும் இன்றித் Thuuvikkulamayil vaagananē thunnaiyē dhum in rrith தாவிப்படரக் கொழுகொம்பிலாத் தனிக் கொடிபோல் Thaavippadarak kozhukombilaath thanik kodi põl பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பிதைக்கின்றதே. Paavith thanimanam thallllaadi vaadip padhaikkinradhë

சிவந்த தாமரை மலர் போன்றது, வீரக்கழல் அணிந் துள்ளது, உன் திருவடி. அதில் என்னைச் சேர்த்துக்கொண்டு காப்பாற்றுவாயாக! அழகிய இறகுகளுடைய மயிலே வாகனமாக உடையவனே துணைஇல்லாதது-தாவிப் படருவதற்குக் கொழு கொம்பு இல்லாத தனிக் கொடிபோன்றது-பாவம்பொருந்தியது -தனிப்பட்டது-இத்தகைய என் மனம் தள்ளாடுகிறது; வாடு கிறது; பதைக்கின்றது.

Your anklet Feet is like red lotus; Please absorb me in Your Feet and protect me. Oh rider of peacock with beautiful feathers! Having none as companion—like a forlorn creeper which

has nothing to hold to and creep—having sinned—a forsaken one-such a mind of mine is wavering, withering and trembling.