பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம் 15

தாயின் கருவிலே விழுந்த நாள்முதற் கொண்டு உன்னுடைய திருவடிகளைக் காணவேண்டும் என்று என் உள்ளம் உருகிற்று. நானும் கிடந்து மிகவும் வருந்தினேன்.

திருவொற்றியூரில் உள்ள இறைவனே! மதுரையில் திருவாலவாய் என்னும் கோயிலில் உள்ளவனே!

திருவாரூரில் இருப்பவனே!

ஒரு பற்றுக்கோடும் இல்லாது நான் இருக்கும் நிலைமையைக் கண்டு மனம் இரங்குவாய்!

காஞ்சிபுரத்தில் திரு ஏகம்பம் என்ற கோயிலில் இருக்கும் பெருமானே! -

I'rom the day I was conceived in the womb,

my mind melted to see your feet.

I undcrwent a lot of suffering.

Oh Lord residing at Thiru otrfiyuur!

Oh Lord of the temple Thiru aalavaay of Madurai!

Oh Lord of Thiru aaruur!

Iły accing that I have no support, please feel pity on me.

Oh Lord abiding in Eakambam at Kaanchipuram!

(10)

நாக்கு இறைவன் பெயரைச் சொல்லிப் பழகினல், மனமும் அதில் கானே லயிக்கும். மனமும் வாக்கும் அந்த மந்திரத்தில் பழகிறல் இறைவன் குடிகொள்ளும் இடமாக மனம் மாறும். அப் பொழுது அந்த மனம் தூய்மை உடையதாக இருக்கும். நன்மை _ள்ள இடத்தில் நல்லனவே சேரும். நன்மையே உரு எடுத்தாற் போன்ற நிலை ஏற்படும்; அத்தகையவர் கூட்டுறவு எல்லாருக்கும் ந_மை விளைவிக்கும். நல்லவர்களோடு இணங்கியிருப்பது நல்லது. _வர்_ளோடு சேர்ந்து இருந்தால் அவர்கள் நடுவில் இறைவன் _றிருப்பான்.