பக்கம்:நீலா மாலா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

1 03 இவர்கள் உடனே என்னை இங்கே அழைத்துவந்து சொந்த மகள் மாதிரியே வளாக்கிருர்கள். பெட்டிச் சாவியைக்கூட என்னை கம்பித் தந்து வைத் திருக்கிருர்கள். இதோ சாவி. உம், பிடியுங்கள்.” இதைக்கேட்டதும் திருடனின் கண்களில் பொல பொலவென்று கண்ணி வழிகிறது. திடீரென்று வீட்டுக்காரரின் காலில் அவன் விழுகிருன், பிறகு, 'ஐயா, 'என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் கான் திருட மாட்டேன்; ஊரை ஏமாற்றமாட்டேன்; உழைத் துப் பிழைப்பேன். என் பெண்ணைக் காப் பாற்றின உங்கள் வீட்டிலேயே நான் கொள்ளே யடிக்க வங்தேனே ! உங்களைக் கொல்வதாக மிரட் டினேனே ! உங்கள் பென் மனசை அறியாமல் உங்கள் வீட்டிலே பொன் திருட வந்துவிட்டேன். உங்கள் பொன் மனம் என்னைத் திருத்தி விட்டது. என் பொன்னியும் என்னை திருத்தி விட்டாள். நான் அடியோடு திருந்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்று அவர் காலடியில் உட்கார்ந்த படியே அழுகிருன். அவன் சிந்தும் கண்ணிர் அவரது பாதத்தைக் கழுவுகிறது. உள்ளத்தை உருக்கும் இக்காட்சியை மெய் மறந்து மக்கள் பார்த்துக கொண்டிருக்கும் போது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு சாமியார் மேடைக்கு ஒடி வந்தார். சடை முடியும், நீண்ட தாடியும், காவி உடையும் அணிந்திருந்த அவா தம்முடைய தாடியைப் பிடித்து இழுத்தார். அது தனியாக வந்து விட்டது. சடை முடியையும் தனியாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/105&oldid=1021666" இலிருந்து மீள்விக்கப்பட்டது