பக்கம்:நீலா மாலா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

121 வில் வண்டியில் மாலா, நீலா, முரளி, களினி ரவி, பரமசிவம் பிள்ளை, பார்வதி அம்மாள் எல்லா ரும் ஏறிக் கொண்டார்கள். பின்னுல் இருந்த ஒரு வண்டியில் தலைமை ஆசிரியருடன் மற்ற சங்கக் குழந்தைகளும், இன்னுெரு வண்டியில் நீலாவின் அம்மா மீனுட்சியும், முரளியின் அம்மா முத்து லட்சுமியும் வேறு சில குழந்தைகளும் ஏறிக் கொண்டார்கள். ஊர் மக்கள் ஆரவாரத்துடன் வழியனுப்ப மூன்று வண்டிகளும் புறப்பட்டன. அமரபுரம் ரயில் நிலையத்தை அடையும்போது மணி ஏழு ஆயிற்று. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது' என்ருர் தலைமை ஆசிரியர். நேரம் ஆக ஆக நீலாவுக்கு அம்மாவைப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கிறதே என்ற கவலை அதிகமாகியது. அம்மாவைத் தனியாக அழைத்து, 'அம்மா, நீங்கள் எனக்காகவே வாழ்கிறீர்கள். உங்களைப் பிரிந்து எப்படி அம்மா இருக்கப் போகிறேன் ?” என்று கண் கலங்கக் கூறினுள். 'நீலா, கண்ணைத் துடை. ஒரே மகளான உன்னைப் பிரிந்து இருக்க எனக்கும் மனசில்லை தான். ஆலுைம், உன் அப்பா கினைத்தது போல, நீ கன்ருகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்ருல், வேறு வழி இல்லை. மாலாவும் அவள் அம்மாவும், உன் மேல் வைத்திருக்கும் பிரியத்தைப் பார்த்தேன். நிச்சயம் தன் சொந்தப் பெண்ணைப் போலப் பார்த்துக் கொள்வார்கள். அந்த கம்பிக்கை எனக்கு இருக்கிறது.புறப்படுகிறபோது அழலாமா? 2134–8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/123&oldid=1021685" இலிருந்து மீள்விக்கப்பட்டது