பக்கம்:நீலா மாலா.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

170 சேகரித்தார்கள். இவற்றுடன் மாலா எழுதிய சில வண்ண ஒவியங்களையும் சோவியத் காட்டுக்குக் கொண்டு செல்ல கீலா எடுத்து வைத்தாள். நீலாவும் மாலாவும் சோவியத் நாடு போவதற் குப் பலவிதமான ஏற்பாடுகளைச் செய்த போதிலும் பள்ளிப் படிப்பிலே எப்போதும் போலவே நல்ல கவனம் செலுத்தி வந்தார்கள். வழக்கம் போல் ஆண்டுத் தேர்விலே கன்ருக எழுதினர்; சிறப்பா கத் தேறினர். நீலா, மாலா, நளினி, ரவி நால்வரும் கோடை விடுமுறையைப் பூங்கு டி யில் குதுகலமாகக் கழித்துவிட்டு, ஜூன் முதல்தேதி சென்னை திரும்பி ஞர்கள். வரும்போது நீலாவின் அம்மா மீனுட்சி யையும் கூடவே கூட்டி வந்துவிட்டார்கள். சோவியத் நாடு போவதற்கு ஒரு வாரம் முன்ன தாகவே நீலா, மாலா, டாக்டர், நளினி, ரவி, மீனுட்சி அம்மாள் அறுவரும் டில்லி வந்துவிட் டார்கள். டாக்டரின் நெருங்கிய நண்பரான டாக்டர் இந்தர் சிங் என்பவருடைய வீட்டில் தங்கி, அவரு டைய காரில் டில்லியில் உள்ள முக்கியமான இடங் களையும், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், கண்ணன் பிறந்த மதுரா போன்ற சரித்திரப் பிரசித்திபெற்ற இடங்களையும் பார்த்தார்கள். ஜூன் 15ஆம் தேதி டில்லியிலிருந்துசோவியத் நாட்டின் தலைநகரான மாஸ்கோவுக்கு நீலாவையும், மாலாவையும், அவர்களுடன் பரிசு பெற்ற நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/172&oldid=1021749" இலிருந்து மீள்விக்கப்பட்டது