பக்கம்:நீலா மாலா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90 அன்று இரவு வெகு நேரம்வரை உட்கார்க்து காடகம் முழுவதையும் எழுதி முடித்து விட்டாள் மாலா. பொருத்தமாகச் சில படங்களையும் போட் டாள். முரளி அந்தப்படங்களுக்கு அழகாக வர்ணம் கொடுத்தான். - மறுநாள் தலைமை ஆசிரியரிடம் மாலா, நீலா, முரளி மூவரும் நாடகத்தை எடுத்துச் சென்று காட் டினர். காடகத்தைப் படிக்கப் படிக்கத் தலைமை ஆசிரியருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வியப்பாக வும் இருந்தது. மாலா! மிக அருமையாக இருக்கி றது இவ்வளவு தூரம் ஒரு சிறு பெண் எழுது வாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்ருர், சார், சார், கீலா எழுதிய கதையைத்தான் கான் நாடகமாக எழுதினேன். என் ஐடியா எதுவுமே இல்லை, சார் !”

  • நீலா, நீ மிக அழகாகக் கதை எழுதியிருக் கிருய், மாலா அதை மிக அழகாக நாடகமாக்கி யிருக்கிருள் . ...ஒரு சில இடங்களில் கொஞ்சம் திருத்தினுல் இன்னும் பிரமாதமாகிவிடும். யாரும் குறை சொல்ல முடியாது. நான் இன்று இரவே திருத்தி வைக்கிறேன்” என்ருர் தலைமை ஆசிரியர். அந்த காடகம் அந்த வட்டாரத்திலேயே பெரிய பரபரப்பை உண்டாக்கப் போகிறது என்பது அப் போது அந்தத் தலைமை ஆசிரியருக்கோ முரளி, அல்லது நீலா, மாலா ஆகியோருக்கோ தெரியாது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/92&oldid=1021648" இலிருந்து மீள்விக்கப்பட்டது