பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


ஒரு மாதத்திற்குப் பிறகு, முன் சொன்னபடியே ஏழு தங்கப்பசு மன்னன் இறந்து போனான். அவன் தகுதிக்குத் தகுந்தபடி மிகவும் சிறப்பான முறையில் ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தான் கறுப்புச் சட்டைக்காரன். பிறகு அவன் பட்டணத்து அரண்மனைக்குப் போனான். “ஏ தங்கப் பசு மன்னர் இறந்து விட்டார். அவர் இறக்கும் போதும் பணக்காரராகவே இறந்தார்!” என்ற விஷயத்தை வீதிதோறும் தமுக்குப் போடச் செய்தான்.

உடனே, பிரபுக்களும், வியாபாரிகளும், பணக்காரர்களும், கோட்டை வாசலிலே வந்து கூடினார்கள். "என்ன துன்பமான செய்தி ஏழு தங்கப் பசு மன்னரைப் போல் இந்த உலகத்தில் யாரும் இருந்ததில்லை. அவருக்கர்க் நாங்கள் நீரிலும் குதிப்போம், நெருப்பிலும் குதிப்போம்! நிச்சயம் அவர் தம் செல்வத்தை அள்ளி வழங்கச் சொல்லி சாசனம் செய்து வைத்திருப்பார்!’ என்று எல்லோரும் சொன்னார்கள்.

அப்போது அரண்மனைக் கதவு திறந்தது. கறுப்புச் சட்டைக்காரன் கையில் குறுந்தடியுடன் குதிரையேறி வந்தான். அவன் பின்னாலேயே வேட்டை நாய்கள் குரைத்துக் கொண்டு வந்தன. "விரட்டுங்கள்! விரட்டுங்கள்!" என்று அவன் வேட்டை நாய்களுக்கு கட்டளையிட்டான். பிரபுக்களையும், வியாபாரிகளையும், பிச்சைக்காரர்களையும் வேட்டை நாய்கள் கடித்தும் உறுமியும் ஓட ஓட விரட்டின. அரண்மனை முற்றத்தில் ஒருவர் கூடப் பாக்கியில்லாமல் ஒடும் வரையிலே கையில் குறுந்தடியுடன் நின்றான் கறுப்புச் சட்டைக்காரன். எல்லோரும், ஒடிப் போன பிறகு, "ஏழு தங்கப்பசு மன்னரின் நீதி இப்படியே இருக்க்ட்டும்" என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பிறகு கறுப்புச் சட்டைக்காரன் அரசனுடைய ஈமக்கிரியை நடந்த ஆற்றங்கரை அரண்மனைக்குத் திரும்பி வந்தான். அங்கேயிருந்து பாலி மொழி