பக்கம்:நூறாசிரியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

103


எட்பகவு - எள்ளைப் பிளந்த அளவு.

உளம் பதியாமல் - உளத்தே நினைவிற் பதிவுறாமல்,

கதிர்க்கை பனியா - கதிரவனின் சுடர்க்கைமுன் பணிபோல்.

கடுகி - விரைந்து.

சிதர்க்கை உகலுதல் - சிதர்ந்து அழித்தல்.

பிறர் செய்யும் தீங்குகளை உடனடியாக மறந்து போதல் என்பது நாகரிகம் பொருந்தியதொரு நல்ல பண்பு. அவ்வாறு மறவாவிடத்து அத்தீங்குகளால் ஏற்படும் மனவுளைவும் அவற்றைச் செய்தாரிடத்து நாம் காட்டும் வெறுப்புகளால் அவர் மேன்மேலும் பகைகொண்டு செய்யும் தீமைச் செயல்களால் பல்வகையான இடர்ப்பாடுகளுமே மிகுமல்லாது, அவரால் நேர்கின்ற துன்பங்கள் ஒழிந்து போகாவென உணர்த்துவதாகும் இப்பாட்டு.

இது பொதுவியலென் திணையும், முதுமொழிக்காஞ்சி என் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/129&oldid=1220735" இலிருந்து மீள்விக்கப்பட்டது