பக்கம்:நூறாசிரியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

நூறாசிரியம்


உடம்பட நிறுத்திய விறல் - மூடநம்பிக்கை நிரம்பிய கொள்கையைத் தடுத்துத் தன் கொள்கைக்கு உடன்பட்டுப் போமாறு மக்களைக் கொண்டு நிறுத்திய பெருமை.

விறல் - வெற்றி, பெருமை.

புறம் பொய்த்து - வெளிப்படையாகவே பொய் சொல்லி மக்களை ஏமாற்றி.

புல்லியர் விதி - புன்மையாளர் நடுக்கமுற

அறம் பெறத் துக்கிய அரசு - அறத்திற்கு வழிவகுக்குமாறு நிறுத்திய அரசமைப்பு. மடம்படு கொள்கைகள் மறவுணர்வு சான்ற வாகையால், அவற்றைத் தடுத்து அறம் பெறுமாறு அரசமைத்தார் என்றவாறு.

தற்சார் புற்ற - தன்னைச் சார்ந்த ஒழுகும். தன் கொள்கையை ஏற்று நடக்கும்.

இளையோர் - இளைஞர், தம்பியர். இவர் கட்சியைச் சார்ந்தவர் அனைவரும் அண்ணாத்துரையவர்களை அண்ணா, அண்ணா, என்று உடன் பிறப்புணர்வுடன் அழைக்கின்ற தன்மையை நோக்கின் அவரைப் பின்பற்றுபவர் அவரின் இளையோராகத் தம்மைக் கருதிக் கொள்பவரே என்க.

சொற்சோர்வு - சொல் தளர்வு

வினைவலி - செயல் வலிமை

தோலாதிடுக - தோல்வியின்றி இலங்குக!

தோள் - முயற்சிக்காக வந்த -.

கானிலை கொள்ளுக - அடிப்படை அசைவிலாது நிலையாக நிற்க,

செந்தமிழ்க் கழல்-செந்தமிழின் வெற்றி. தமிழ்மொழிக்கும் தமிழ்பேசும் இனத்திற்கும் ஒரு தடை நீக்கம் செய்து பழம் பெருமையை மீண்டும்கால்கொளச் செய்தது இவர் கழகமாகவின் இவர் தம் வெற்றி செந்தமிழின் வெற்றி எனலாயிற்று.

இது, பாடசண் திணையும், இயன்மொழி என்துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/186&oldid=1220684" இலிருந்து மீள்விக்கப்பட்டது