பாவலரேறு பெருஞ்சித்திரனார்
161
யாங்கோய் வாளோ துரங்குபிற் றூங்கி
ஆங்குமுற் புலர்ந்து வாழில் வினைந்து
பனிநீர்க் கொண்டு மணியுடல் மண்ணி
குனிநுதற் பளிங்கிற் குங்கும மிலங்க
எமைவிழிப் பித்தெஞ் சிறாரை எழுப்பி
5
அமைய வுதவி இமையும் ஓயாது
அடுக்களை வெம்பணி அலர்முகத் தலைந்தே
உடுக்கை வெளிற்றிப் பீறல் ஒட்டிச்
சாயல் ஞான்றொளி யேற்றியுண் டுவந்து
பாயல் வீழ்ந்தெமைப் பற்றி யோளே!
10
பொழிப்பு:
எவ்விடத்து ஒய்ந்திருப்பாளோ, முன் இரவில் யாம் தூங்கிய பின் தூங்கி, அவ்வாறே மறுநாள் வைகறையில் எமக்கு முன்னதாகக் கண் விழித்து எழுந்து, வாழ்கின்ற அகத்தையும் புறத்தையும் வினையால் தூய்மைசெய்து, குளிர்ந்த நீரைக் கொணர்ந்து தன் அழகிய வுடல் குளித்துப் பளிங்கு போல் ஒளிசான்ற வளைந்த நெற்றியில் குங்குமம் விளங்கும் முகத்துடன், எமை விழிப்புறச் செய்து, எம் மக்களைத் துயில் களையச் செய்து, யாவர்க்கும் அவரவர் வினைகளுக்குப் பரிவு கலந்த அன்புடன் துணையாக நின்று, இமைப்பொழுதும் ஒய்வு கொள்ளாது, அடுக்களையின் வெம்மை நிறைந்த பணிகளில் மலர்ந்த முகத்துடன் அலைவுற்றுப் பிற்பகலில் அழுக்கடைந்த உடைகளை வெளுத்துத் தூய்மை செய்து, கிழிந்தவற்றைத் தைத்துச் சாயுங்காலப் பொழுதில் விளக்கம் ஏற்றி, இராவுணவு உண்பித்துத் தானும் உண்டு, எல்லாருடனும் பேசி மகிழ்ந்து மீண்டும் படுக்கையில் வந்து வீழ்ந்து எம்மைக் காதலால் பற்றிக் கொண்ட தலைவியாகிய இவளே!
விரிப்பு:
இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.
கற்புக் காலத்துத் தலைவியின் ஓயாத இல்லறப் பணிகளைக் கூர்ந்து நோக்கிய தலைவன், அவள் அவற்றை அமைதியுடனும் மகிழ்வுடனும் மிகுந்த பொறுமையுடன் செய்வதையும், அவற்றுக் கிடையில் அவள் சிறிதும்