பக்கம்:நூறாசிரியம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58 பாடுக புலவீர்

பாடுக புலவீர் பீடுடைப் பாவே!
ஏவா அரைசின் எண்ணியது துணியும்
காவலர் போரீர் நீவிர்! இற்புகுந்து
யாவர் தேடினிர் என்னலும்; அம்மையீர்!
மேவறு சின்மொழி கடிந்து தலைக்கூடி” 5
மூவறு நாளா ஆவணத் துமிய
சூர்படு ஒதையும் எழுச்சியும் சூடுமா
ஊர்கொள் அமலை அறிந்திலிர் போலும்!
கலைபுகு கழகத்துப் புலைபுக,
சுவடிச் சிறாஅர் கவடியி னாட்ட 10
ஊனும் உறக்கமுந் துறந்து, பகலிரவாக்
காவற் படுப்பதுங் காண்கிலிர் போலும்!
இவ்வே மறுகின் எழுந்த கூட்டத்து
எம்மோன் ஒருவன் முன்பல் தெறித்துக்
குருதி பிதிரக் கூர்ங்கல் எற்றிக் 15
கடிதின் நுழைந்தோர் செங்கண் விடலை,நும்
இற்புறத்துக் கரந்தா னாக அவனைக்
கைப்படத் தொடர்ந்தேம் காட்டுதிர் என்ன, அம்
முதியோள் நடுக்குற வெழுந்து,
முன்றிலும் அகத்தும் மடையினுங் காட்டி20
ஒன்று மறிகிலே மென்றா ளாக,
வந்தோர் மனம்பெறக் கழிய, உட்புகுந்து
நென்னிறை குரம்பை ஒளியவுள் ளிறக்கிய
புன்றலைச் சிறுவனை அகவிப் புறந்துக்கி
அன்னைத் தமிழ்க்கே அவலங் கடிந்தோய் 25
நின்னை மகனாப் பெற்றிலேன் பதடியென
இளந்தலை முகர்ந்து குருந்துதோள் நீவி
வெல்க தமிழென விறல்பெற முழக்கி
மல்க நீர்விழி மறைப்பச்
செல்கென விடுத்த சீர்மை நினைந்தே!30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/292&oldid=1221408" இலிருந்து மீள்விக்கப்பட்டது