பக்கம்:நூறாசிரியம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

நூறாசிரியம்

62. யாவர் காக்கும்



எம்மையுங் காவார்; தம்மையுங் காவார்;
கொம்மைப் பருவத்துச் சின்னாட் கூடவில்
நினக்கியான் பயந்தநின் மகாரையுங் காவார்;
முகில்படு முன்றில் முக்கொடி நிறுத்தி

அகல்நெடுங் கொற்றத்து அரசாண் டிருந்த

5

ஒருமா முதுமொழித் திருவையுங் காவார்;

வடவர் ஊன்றிய தமிழ்மா நன்னிலம்
கெடாஅது நிறுத்துஞ் சிறாரையுங் காவார்
செற்றலர் எதிரின் கிளையோடு பொருதும்

அற்றைநாள் தமிழரைப் போலா திழிந்த

10

இற்றைநாள் மாக்களை அறிந்தும் எமைவிடுத்து

யாவர் காக்குமென் றெண்ணித்
தீப்புகுந் தாவி துறந்தனை நீயே!

பொழிப்பு:

(உண்டியும் உறையுளுங் கொடுத்துக் காக்கவேண்டிய கடமை கொண்ட நீ போயின. பின்றை, இதோ தனித்து நிற்கும்) என்னையும் என் னோடு பொருந்தியவரையும் காத்து நிற்கார் : (அடிமையும் அறியாமையும் பட்டு நிற்கும்) தங்களையும் காத்துக் கொள்ளார்; இளமைப் பருவத்தின் பொழுதில், சில நாள்கள் நின்னைக் கூடியதன் பயனாக, நின்வழி, நான் பிறப்பித்த நின்னுடைய மக்களையும் காத்து நிற்றலைச் செய்யார், வானின் முகிலிடைத் தோயும்படி, அரசமனை முன்றிவில் மூவேந்தர் நாட்டிய மூன்று கொடிகள் நிறுத்தப்பெற்றிருந்த, அகலிய நீண்ட ஆட்சியமைத்து, அரசாண்டு கொண்டிருந்த, உலகின் ஒரே பெரிய முதுமொழியாகிய தமிழ்ச்செல்வியையும் இவர்கள் காக்கும் திறமுடையவர்கள் அல்லர் வடநாட்டினர் வந்து புகுந்து பெயராமல் நிற்கும் தமிழகம் ஆகிய பெரிய நல்ல நாட்டையும், படிப்படியாகச் சிதைந்து போதலினின்று அது கெடாமல் காத்தற்குப் போராடிக் கொண்டிருக்கும் (இந்திப் போராட்ட) இளைஞர்களையும் (அவர்களுக்கு வந்து நேரும் துன்பங்களினின்று) காத்து நிற்க முயற்சி செய்ய மாட்டார். பகைவர்கள் வந்து போருக்கு எதிர்ந்து நிற்பின், தம் இனத்தொடும் எழுந்து முன்நின்று போர் செய்யும் திறம் வாய்ந்த அன்றைய நாளில் இருந்த தமிழ் மறவர்களைப் போல் அல்லாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/308&oldid=1209158" இலிருந்து மீள்விக்கப்பட்டது