பக்கம்:நூறாசிரியம்.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

287

நூறாசிரியம்

மன்றுகொள நின்ற சிற்றில் ஆடும் சிறுமி திருமணத்திற்கு அணியமாகி நிற்கின்ற, சிற்றில் விளையாடும் தங்கையாகிய சிறுமி.

அக்கையின் திருமணம் நிகழ்ந்து, அதன் பெருமையினதும் நன்மையினதும் அடிப்படையில் தங்கைக்கும் மணம் வந்து கூடும் தன்மை ஈண்டுக் குறிக்கப்பெற்றது.

பெருமை - அக்கை மணந்து கொண்ட மணமகனின் தன்மையால் வரும் குடும்பச் சிறப்பும், அவனுக்கொத்த தகுதியில் தங்கையையும் மணம்பேச வரும் மணமகனது சிறப்பும்

நன்மை- அக்கையை மணந்து கொண்டவனால், அவள் தங்கையின் திருமணத்திற்கு வரும் குடும்பவுதவி ; அது மணவினைத்துணையும் பொருளுதவியும் ஆகலாம் என்க.

கிளைகிளை வந்த உறவு - மரபான் தொடர்ந்து வரும் குடும்ப உறவு.

குடும்ப உறவு மேலும் தொடர்வான் வேண்டி, இவளை மனங்கொடுக்கவும், மணந்து கொள்ளவும் தகுதியுடைய உறவினர்கள்.

அவர்களையும் எண்ணாது, அவர்கள் இவளை மணந்து கொள்ளவியலாது போனதால் வரும் ஏமாற்றத்தையும் அ'தால் வரும் பகையையும் சிறிதும் உணராமல், அயலான் ஒருவனுடன், அவனைத் தன் விருப்பமாக மணந்து கொள்ள வேண்டி வேற்றுர் போகினளே என்று புலம்பினாள் என்க.

இளையோன் பாங்கின் விளைவும் ஒராது - இவளை உடன் போக்கிச் சென்ற இளைஞனாகிய இவள் காதலனின் புதிய கூட்டுறவால் வரும் பலவகையான எதிர்விளைவுகளையும் ஆராய்ந்து பாராமல்,

புதிய உறவால், இவளை முன்கூட்டி அறியாத புக்கக உறவினர்களாலும், இவள் பெற்றோரின், உற்றாரின் பெருமையறியாத புதுவுறவுக் கணவனாலும், அறியாமையும் மதிப்பின்மையும் கலந்து ஏற்படப்போகும் எதிர்விளைவுகள் என்க.

நெருநல்.-நேற்று கால அண்மைநோக்கி, உலகியல் வழக்கில் நேற்று என்றாள்.

பாவைக்கு - மரப்பாவைக்கு.

அறுவை உடுத்து - ஆடையை உடுத்தி.

சிறுவெண் முத்தத்துத் தொடையல் - சிறிய வெள்ளிய முத்துகளால் ஆகிய மாலை.


சாற்றி - சாற்றுவித்து, அணிவித்து.