பக்கம்:நூறாசிரியம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

301

பற்றிய வெஞ்சினம், பழிதீர்க்கும் வஞ்சினமாகி, உயிருணர்விலும் பற்றி நிலைகொண்டு விட்டது என்க. நெஞ்சில் வெஞ்சினமாகி நிலைகொண்ட வஞ்சினம் , செயற்பட்டுப் பழிதீர்க்கப்படுமுன், ஒருகால் தானுவின் உடல்வேறு வகையில் அழிவுற்று, அத்துடன் அந்நினைவைத் தாங்கிய நெஞ்சாங்குலையும் அழிந்துபடின், அவ்வஞ்சினம் செயல்படாமலே அழிந்து விடக்கூடுமன்றோ? அதன்பின் அவள் கொண்ட வெஞ்சினத்தால் பயனேதும் இல்லையாகின்றதன்றோ? அவ்வாறு இறப்பு ஒருகால் நேர்ந்துவிடின் உடலும், அதன் வழி நெஞ்சாங்குலையும், அதன் வழி அதனுள்ளிருக்கும் இராசீவ் என்னும் கொடியவனை அழிக்க வேண்டும்’ என்ற நினைவும் அழிந்து விட்டாலும் அப்பழிவாங்கும் வஞ்சின உணர்வு உயிரிலும் போய் நிலைத்திருப்பதால், அவ்வுயிர் மீண்டும் பிறவியுற்று, அந்நினைவு அழியாமல், அஃது எடுக்கின்ற மறு உடலுடன், இவ்வுலகத்து இயங்கி, அதே இராசீவைப் பழிவாங்கும் என்பதால் அந்நினைவு உயிரிலும் நிலைத்தது என்று கூறவேண்டியிருந்தது என்க. -

ஒரு தனி நின்றே - தானு (துணையாள்கள் யாருமில்லாமல்) தான் ஒருத்தியாகவே (முயன்று) நின்று.

ஒரு சிறுசெயலுக்கும், பெரும்பாலார்க்கு ஒரு துணை தேவையாக உள்ளது. துணையோ டல்லது நெடுவழி பேர்கேல்’ என்று சான்றோரும் கூறினர். ஆனாலும், ஒரு படையாகப் போய்த் தாக்கி அழிக்க வேண்டிய வலிமை வாய்ந்த அரசராக நின்ற ஒருவரைத் தான் ஒருத்தியாகவே நின்று அழித்த துணிவையும் வீரத்தையும் வியந்து பாராட்டிக் கூறியது என்க.

ஊர்நடு சிதைத்த (வேறு எங்காவது சந்திலோ பொந்திலோ, அறையிலோ, சிறையிலோ அல்லாமல்) ஊர்மக்களும் காவலரும் கூடியிருந்த பெருங்கூட்டத்தின் நட்ட நடுவில் எதிரியைச் சிதைத்த, சிதைத்தல்-உருவே தெரியாமல் சிதையச் செய்தல்.

தானு, தன் இனத்திற்கு அழிவைத் தேடும் கொடியவன் இராசீவை ஒழித்திட வெஞ்சினம் கொண்டு, இலங்கையிலினின்று இந்தியா வந்து, தமிழகத்திற்கு வந்த அவரை, தனித்த ஒருத்தியாக முன் நின்று ஊர் மக்களும், காவலர்களும் நிரம்பியிருந்த பெருங் கூட்டத்திற்கு நடுவில், தன் உடலில் வெடிகுண்டைப் பிணித்துக் கொண்டு, அவரை அணுகிக் குண்டை வெடிக்கச் செய்து, இராசீவை அழித்ததோடின்றித் தன்னையும் அழித்துக்கொண்டாள்; இது வெறும் வெறியுணர்வால் வரும் செயலன்று மிகப்பெரும் ஈகவுணர்வால்தான் இவ்வாறு செய்தற்கியலும், தானும் அழியப் போகிறோம் என்று ஒர் இன்றியமையாத செயலில் ஈடுபடும் செயல், குறைத்து மதிப்பிடற்குரிய செயலன்று, அது செயற்கரிய ஈகச் செயலே.

போர்க்கள்த்தில் தன் நாட்டுக்காக உயிர் துறக்கும் ஒருவர், உயிர் துறப்பது உறுதி என்று எண்ணிக் கொண்டு போவதில்லை. ஆனாலும் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/327&oldid=1221392" இலிருந்து மீள்விக்கப்பட்டது