பக்கம்:நூறாசிரியம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

நூறாசிரியம்

வீரமென்றும் ஈகமென்றும் போற்றப் பெறுகின்றது. ஆனால் தானுவோ தான் செய்யப் போகின்ற செயலால் தன் உயிர் போவது உறுதி என்று நன்றாகத் தெரிந்தே அச்செயற்கரும் செயலைச் செய்தவள் ஆகின்றாள். எனவே, உலகத்தில் இத்தகைய ஈகம் பெரிதும் புகழுக்குரியதாகும்.

ஈகம் அன்றோ ஈகம் - இத்தகைய ஈகம் (தியாகம்) அன்றோ ஈகம் இச்செயல்தான் தன் இனமக்களைக் காக்கதன் உயிரை ஈதல், பிறிதெல்லாம் உயிரை இழத்தல், இழத்தல் ஈகமாகாது. அதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதில் விரும்பியே உயிரிழத்தலால் இவ்வகை ஈகம் பிற வகை ஈகங்கள் அனைத்திலும் பெரிதாகும் என்று உணர்தல் வேண்டும்.

ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழ்க்கே- இவ்வாறான அருஞ் செயல் செய்து, ஈகத்தின் வடிவமாக இருந்து, தானு என்னும் இலங்கைத் தமிழ்ப்பெண் பெற்ற அழிவில்லாத புகழ்க்கு இவ்வுலகே ஈடாகாது என்க.

உலகம் ஈடாகாது என்பது, உலகின் புகழ்த் தன்மையை நோக்கி என்க.

உலகம் பெரும் புகழுடையது; நிலைத்த புகழுடையது. ஏனெனில் உலகில் உள்ள பொருள்கள்; உயிர்கள் அனைத்தும் அழிந்த பின்னர்தான் உலகம் அழிதரும்எல்லாம் அழிந்தும் தான். இருக்கின்ற பெருமை புகழ்இவ்வுலகத்திற் குண்டு என்பார் திருவள்ளுவப் பேராசான் (336). அதனால் அனைத்துப் புகழினும் உலகே நிலைத்த புகழுடையது.இறுதி உயிர் அல்லது மாந்தன் அழியும் வரை உலகின் புகழ் நிலைத்திருக்கும்.

ஆனால், தானுவின் ஈகம், உலகின் நிலைத்த புகழினும் நிலைத்த புகழுடையது. அஃதாவது உலகம் உள்ளளவும் தானுவின் புகழ் நின்று இலங்கும் என்பது உறுதியால் அவள் புகழ்க்கு அவ்வுலகின் புகழும் ஈடாகாது எனப் பெற்றது என்க.

இனி, நேற்றிருந்த ஒருவர் இன்றில்லை என்னும் பெருமையை இவ்வுலகம் உடையது அன்றோ. அக்கூற்றுக்கு ஏற்ப, நெருநல் இருந்த இராசீவ் போல் பெருமை பெற்ற ஒருவர், மறுநாள் இல்லாமற்போன தனிப் பெருமையை இவ்வுலகம் பெறுமானால் அப்பெருமையை உலகிற்கு உண்டாகிக் கொடுத்தவள் தானு அன்றோ? தமிழினத்தை அழித்தவனை அழித்துத்தானு பெற்ற புகழ் உலகின் உள்ள தமிழரெல்லாரும் ஒப்பத் தகுந்த பெருமை வாய்ந்தது என்க.

அரசியல் உலகில், பலவகையான சூழ்ச்சிகள் செய்தும், மக்கள் பணத்தைத் தவறாகக் கொள்ளையிட்ட பெரும் பொருளைச் செலவிட்டும், சாதி மேலாண்மையாலும், மத மேலாண்மையாலும் இந்திய ஆட்சியின் உயர் பதவியில் அமர்ந்து, தமக்கு வேறான மாறான தமிழினத்தை அடியோடு ஒழிக்கக் கருதிப் பல அழிவுகளையும் அழிம்புகளையும் செய்து கொண்டிருந்த இராசீவ் என்னும் அறக்கொடியவர் ஒருவரை, அவரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/328&oldid=1221393" இலிருந்து மீள்விக்கப்பட்டது